Hot box: 1 லட்சம் ஹாட்பாக்ஸ்! 2 கோடி ரூபாய்க்கு வாங்கியாச்சு! ஆனா சீட்? தவிக்கும் அதிமுக எம்எல்ஏ
திருப்பூர்: பல்லடம் தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாட்பாக்ஸ்களை வாங்கி வைத்துள்ள அதிமுக எம்எல்ஏ ஆனந்தனுக்கு தற்போது சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இவ்வளவு செலவு செய்து வாங்கி வைத்த ஹாட்பாக்ஸ்கள் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் மக்களை கவர அண்டா, குண்டான் எல்லாம் வாங்கி தருவதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகியின் பிறந்தநாளை சாக்கு காட்டி இவற்றை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவினர் ஹாட்பாக்ஸ், தட்டு, சேலைகள் உள்ளிட்டவைகள் வாங்கி இருப்பு வைத்துள்ளனர். வரும் 24-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பல்லடம் தொகுதி
அது போல் பல்லடம் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வரும் 24 ஆம் தேதி, ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளாராம். கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவினர் இந்த விழாவை பெரிதும் கொண்டாடாமல் பட்டும் படாமல் கொண்டாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
தேர்தல்
ஆனால் இந்த முறை தேர்தல் நடைபெறுகிறது என்பதால் தொகுதி மக்களுக்கு வழங்க, கடந்த 3 மாதங்களுக்கு முன்பே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாட்பாக்ஸ்களை ஆர்டர் கொடுத்து வைத்துள்ளாராம். அதில் ஜெயலலிதா புகைப்படம், இரட்டை இலை சின்னமும் இடம் பெற்றிருக்கிறதாம்.
ஹாட்பாக்ஸ் விலை
அரை லிட்டர் ஹாட்பாக்ஸ் விலை ஒன்று ரூ 150 என வைத்துக் கொள்வோம். அதில் சின்னம் பொரித்த செலவு ஒரு 50 ரூபாய் என்றால் ஒரு ஹாட்பாக்ஸுக்கு ரூ 200 செலவிடப்பட்டுள்ளதாக வைத்துக் கொள்வோம். அப்போது 1 லட்சம் பேருக்கு என்றால் ரூ 2 கோடி செலவு செய்துள்ளாராம். இது ஒரு தோராயம்தான். இதை விட கூடுதலாகவும் செலவாகியிருக்கலாம், குறைந்தும் ஆகியிருக்கலாம்.
இறங்கிய இடி
இத்தகைய விலை கொடுத்து வாங்கி ஜெயலலிதா பிறந்தநாளுக்கு தொகுதி மக்களுக்கு வழங்க முடிவு செய்திருந்த ஆனந்தனின் தலையில் இடி விழுந்துவிட்டதாம். அதாவது ஹாட்பாக்ஸ் வாங்கி வைத்தாகிவிட்டது. ஆனால் சீட் கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாம்.
பல்லடம் தொகுதிக்கு போட்டா போட்டி
இந்த முறை பல்லடம் தொகுதியை தனக்கு வழங்க வேண்டும் என கரைப்புதூர் நடராஜன் முயற்சித்து வருகிறாராம். இதனால் ஆனந்தன், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளில் எப்படியாவது சீட் பெற முயற்சித்து வருகிறாராம். இதில் திருப்பூர் வடக்கு தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆனந்தன் போட்டியிட்டு வெற்றி பெற்றாராம். அதற்கு அடுத்து அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.என்.விஜயகுமாருக்கு சீட் வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்தான் எம்எல்ஏவாக இருந்து வருகிறாராம்.
குணசேகரன்
இதனால் அவர் இந்த முறை அந்த தொகுதியை குறி வைப்பார் என சொல்லப்படுகிறது. திருப்பூர் தெற்கு தொகுதியை எடுத்துக் கொண்டால் அது தற்போது திமுகவிடம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட குணசேகரன், திமுக வேட்பாளர் செல்வராஜிடம் வெறும் 4,709 வாக்குகளில் தோல்வி அடைந்தார். எனவே இந்த முறை அவரும் தனக்கு சீட் வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் முட்டி மோதக் கூடும்.
ஜெயலலிதா பிறந்தநாள்
இதனால் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் ஹாட்பாக்ஸ்களை எந்த தொகுதியில் கொடுப்பது, நமக்கு சீட் கிடைக்குமா என்ற குழப்பத்தில் ஆனந்தன் உள்ளாராம். ஒரு வேளை எங்கும் கிடைக்காவிட்டால் ரூ 2 கோடி மதிப்பிலான பரிசுகளை ஏற்கெனவே ஓட்டு போட்டு தேர்வு செய்த பல்லடம் மக்களுக்கே கொடுத்துவிடலாமா என்றெல்லாம் பல ஆங்கிளில் யோசனையில் இருக்கிறாராம்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி! -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி












Click it and Unblock the Notifications