திருப்பூரில் ஆச்சரியம்.. நறநறன்னு கடித்து.. கோயிலில் திடீர்னு தோன்றிய "ஆஞ்சநேயர்".. பக்தர்கள் பரவசம்
திருப்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. திருப்பூர் மாவட்டம், முருகர் கோயிலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
தலையில் தேங்காய் உடைத்தல் என்பது பக்தயின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டு வருகிறது.. பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக தலையில் தேங்காய் உடைத்து கொள்வார்கள்.. தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில், காலம் காலமாகவே, இந்த நேர்த்திக்கடன் நடத்தப்படுகிறது.

திருவிழா: குறிப்பாக, திருவிழா காலங்களில், இப்படியான தேங்காய் உடைத்தல் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. தங்களுடைய கோயில் முன்பு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, ஈர உடையுடன் வரிசையில் அமர்ந்தும், கோவில் பூசாரி ஆணி செருப்பை அணிந்துகொண்டும், அருள் வந்து ஆடிக்கொண்டே பக்தர்களின் தலையில் தேங்காய் உடைப்பார்கள்.
தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி என்று, இதற்காகவே பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இப்படி தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது என்றும், இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும்போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது என்றும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்றும் பக்தர்கள் பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
ஆச்சரியம்: அந்தவகையில், திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்டது அலகுமலை கோவில்.. இங்கு முருகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, இப்போது தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..
கந்த சஷ்டி விழாவின் 4ம் நாளான நேற்றும், நிகழ்ச்சிகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. அப்போது, காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு, ஒரு இளைஞர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அவர் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞராவார். சாமி கும்பிட்டு கொண்டேயிருந்தபோது, திடீரென அவருக்கு அருள் ஏற்பட்டுவிட்டது.
ஆஞ்சநேயர்: இதனால், ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்ய ஆரம்பித்தார்.. பிறக, ஆஞ்சநேயர் சிலையின் அருகில் சென்று, இந்தி மொழியில் பேசியவாறே, பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காயை கையில் எடுத்து, டக்கென கடிக்க ஆரம்பித்துவிட்டார்.. அந்த தேங்காயை பற்களாலேயே கடித்து உறித்தார்.. இப்படியே 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை பற்களால் கடித்து உறித்தார்.
அனுமன் போலவே பாவனை செய்து, அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருமே ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. சிலருக்கு புல்லரித்துப்போய்விட்டது.
செல்போன்: மேலும் சிலர் இந்த நிகழ்வை, தங்களது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டனர். பிறகு, அங்கிருந்த அனைவருமே, அந்த வடமாநில இளைஞரை, பயபக்தியுடன் வழிபட்டனர்.. சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர் தன்னைத்தானே, ஆசுவாசப்படுத்தி கொண்டு, இயல்பு நிலைக்கு திரும்பினார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications