திருப்பூரில் கடையை சோதனை செய்ய வந்த 'ஆபிசர்'.. கல்லா பெட்டியில் கண்ட காட்சி.. இறுதியில் ட்விஸ்ட்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், பெருமாநல்லூர் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி வந்த சுரேஷ்குமார் என்பவர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் ஏதாவது இருக்கிறதா? என்றும் உங்கள் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். பின்னர் மளிகைக் கடையில் செய்த வேலையால் கம்பி எண்ணி வருகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்துவார்கள்.. அப்படி சோதனை நடத்தும் அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள்.. சில நேரங்களில் கடைகளில் உணவு பொருட்கள் மோசமாக இருந்தால் சீல் வைப்பு நடவடிக்கையும் எடுப்பார்கள். ஆனால் அதிகாரிகள் பெயரில் சிலர் மோசடி செய்வதும் நடக்கிறது. அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் நடந்ததை பார்ப்போம்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் பகுதியில் 60 வயதாகும் சக்திவேல் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று சக்திவேல் தனது மளிகை கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் தன்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்று கூறியிருக்கிறார்.
பின்னர் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி என்று கூறிய நபர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் ஏதாவது இருக்கிறதா? என்று உங்கள் கடையை சோதனை செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளார் அத்துடன் கடையில் சோதனையிடுவது போல, உள்ளிருந்த பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கிறார்
இதை உண்மை என்று நம்பிய கடைக்காரர் சக்திவேல், கடைக்குள் இருந்த பிளாஸ்டிக் பொருட்களை வெளியே எடுத்து வைக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த இளைஞர் கடையில் கல்லாபெட்டியில் இருந்த ரூ.9 ஆயிரத்தை திடிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார். இதனால் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சக்திவேல் சுதாரித்தார். உடனடியாக அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து வைத்துக் கொண்டார்.
அதன்பின்னர் சக்திவேல் குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், குன்னத்தூர் போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவை பீளமேடு, காந்திமா நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ்குமார் (27) என்பது தெரியவந்தது. இவர் இதுபோல் குன்னத்தூரிலும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சூலூர், பல்லடம் போலீஸ் நிலையங்களில் சில திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications