“காங்கயம் காளை சிலையை, காங்கயத்திலேயே வைக்க அனுமதி இல்லையா?” அண்ணாமலை கேள்வி
திருப்பூர்: கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூர் காங்கேயம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக முன்பகுதியில் காங்கேயம் சிலை அமைக்க பொதுமக்கள் கோரி வருவதாகவும், ஆனால் அனுமதி மறுக்கப்படுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரத்தில் அமைந்துள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக முன்பகுதியில், காங்கயம் பகுதியின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில், காங்கயம் பகுதியின் அடையாளச் சின்னமான "காங்கயம் காளை சிலை” அமைக்க, அப்பகுதி பொது மக்கள், கடந்த மூன்று ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், அனுமதி கொடுக்காமல் இருக்கிறது திமுக அரசு.

காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மகேஷ்குமார் முயற்சியால், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தமிழக அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில், கடந்த 28.02.2022 அன்று, தீர்மான எண்.350-ன் படி காங்கயம் காளை சிலை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 02.03.2022 அன்று, காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மூலம், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காளை சிலை அமைக்க அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஆனால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், சிலை வைக்க அனுமதி மறுத்திருக்கிறார். இதன் பின்னணியில், திமுகவினர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திரு.மகேஷ்குமார் அவர்களின் தொடர் முயற்சியால், காங்கயம் காளையின் பாரம்பரியத்தை விளக்கி, அரசின் இதர துறைகளிடம் உரிய அனுமதி பெற்று, மீண்டும் கடந்த 19.09.2022 அன்று, காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில், நமக்கு நாமே திட்டம் மூலம் நிதி திரட்டி சிலை அமைத்துக்கொள்ள அனுமதி கேட்டு, தமிழக அரசின் செயலாளர் அவர்களுக்குத் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பித்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 21.01.2023 அன்று, பொருந்தாத காரணங்களைக் கூறி, மாவட்ட ஆட்சித்தலைவர் இந்தக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்திருக்கிறார். காங்கயத்தின் பாரம்பரிய அடையாளமாகிய காங்கயம் காளை சிலையை, காங்கயத்திலேயே வைக்க அனுமதி இல்லை என்றால், வேறு எங்கு வைப்பது? காணும் இடங்களிலெல்லாம், தன் தந்தை கருணாநிதி சிலை மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ₹1,000 கொடுப்போம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்து, ஆண்டு நான்காகிறது. அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில், காங்கயம் பகுதி மக்கள் காளை சிலை வைப்பதில், திமுகவுக்கு என்ன வெறுப்பு? தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்க எண்ணமா?
உடனடியாக, காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக முன்பகுதியில், காங்கயம் பகுதியின் அடையாளச் சின்னமான "காங்கயம் காளை சிலை” அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று, திமுக அரசையும், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும் வலியுறுத்துகிறேன். மறுத்தால், தமிழக பாஜக சார்பில், மாபெரும் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications