மோடி பெயரைச் சொல்லி திருப்பூரில் பாஜகவினர் கட்டாய வசூல்? ஜவுளிக்கடை நடத்தும் பெண் குமுறல்!
திருப்பூர்: பிரதமர் மோடி பெயரைச் சொல்லி திருப்பூரில் பாஜகவினர் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடுவதாக ஜவுளிக்கடை நடத்தும் பெண் ஒருவர் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
50 ரூபாய், 20 ரூபாய் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுக்கும் அவர்கள் 500 ருபாய் கேட்டு அடம் பிடித்ததாகவும் தனது பக்கத்து கடைக்காரர் வேறு வழியின்றி 200 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்ததாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். கேட்டால் தலைவர் வருகிறார் என்பதால் நன்கொடை வசூலிப்பதாக அவர் கூறினார்கள் என்றார். இது தொடர்பான வீடியோவை தினசரி நாளிதழ் ஒன்றின் சமூக வலைதளப் பக்கங்களில் காண முடிகிறது.

வரும் 27ஆம் தேதி அன்று திருப்பூர் வருகை தரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக பாஜக கவனித்து வருகிறது. அதே போல் பாதுகாப்பு பணிகளையும் மேற்கு மண்டல ஐஜி தலைமையில் காவல்துறையினர் கவனித்து வருகின்றனர்.
பிப்ரவரி 27ஆம் தேதி மதியம் 1.20 க்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2 மணிக்கு கோவை சூலூர் சென்றடைகிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 க்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார்.
பிற்பகல் 2.45 முதல் 3.45 வரை, அதாவது 1 மணி நேரம் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்று பேசும் மோடி, அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறார். அங்கு மாலை 5.15 முதல் 6.15 மணி வரை தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணியளவில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார்.
மறுநாள் காலை, அதாவது 28ஆம் தேதி அன்று காலை 8.15 மணிக்கு நட்சத்திர விடுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, 8.40 க்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு 9 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார். அங்கு முக்கால் மணி நேரம் மட்டும் இருக்கும் பிரதமர் மோடி, 9.45 முதல் 10.30 மணி வரை அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.10க்கு நெல்லை செல்கிறார்.
இதனிடையே விஷயத்திற்கு வருவோம், பிரதமர் மோடி வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பாஜக பக்காவாக செய்து வருகிறது. சிறு வியாபாரிகளிடம் டொனேஷன் வாங்கித் தான் செலவுகளை கவனிக்க வேண்டும் என்ற நிலையில் பாஜக இல்லை. ஒரே ஒரு போன் காலில் எத்தனையோ கார்ப்பரேட் கம்பெனிகள் நன்கொடை வழங்க முன்வரக் கூடும், இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் பெயரைச் சொல்லி சிறு வணிகர்கள், வியாபாரிகளிடம் தங்களை பாஜகவினர் எனக் கூறிக்கொண்டு சிலர் திருப்பூரில் கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபட்டிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இதனை தமிழக பாஜக தலைமை நிர்வாகிகள் கவனித்தில் கொண்டு, கட்சிப் பெயரை தவறாக பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவோரை கண்டறிந்து ஆரம்பத்திலேயே பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தேவையின்றி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும்,
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications