சிக்கன் விலை அதிரடியாக உயருகிறது.. திருப்பூர், கோவை, நாமக்கலில் அதிரடி முடிவு
திருப்பூர்: கோவையில் சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி மற்றும் ஈரோடு, திருப்பூரில் பல்லடம், திண்டுக்கல், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இவர்கள் வளர்ப்பு கூலியை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் கோழி இறைச்சி விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே சிக்கன் விலை மார்கழி மாதத்தில் கூட குறையவில்லை. இப்போது மேலும் உயர்ந்தால் பாதிப்பு ஏற்படும்.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் அய்யப்பன் சாமிக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள்.. இந்த சமயத்தில் சிக்கன் விலை, முட்டை விலை, மீன் விலை அதிரடியாக குறையும். ஆனால் வழக்கத்தைவிட உற்பத்தி குறைவு காரணமாக சிக்கன் விலை அதிமாகவே இருக்கிறது. முட்டை வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆவதால் அதன் விலையும் கடுமையாக இருக்கிறது. மீன் விலையும் குறைந்தபாடில்லை.. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த சூழலில் கோழி உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக சிக்கன் விலையும் அதிரடியாக உயரப்போகிறது. தமிழகத்தில் கோவை சுல்தான்பேட்டை பொள்ளாச்சி மற்றும் ஈரோடு, திருப்பூர் பல்லடம், திண்டுக்கல், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் செயல்படுகின்றன. பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.) சார்பில் கறிக்கோழிகளின் கொள்முதல் விலை அதன் விற்பனை நிலவரத்துக்கு ஏற்ப தினமும் நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த 20-ந்தேதி ரூ.120 ஆக இருந்த கொள்முதல் விலை சிறிது, சிறிதாக அதிகரித்து தற்போது ரூ.133 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சுமார் ரூ.100 முதல் ரூ.105 வரை செலவு ஏற்படுகிறது.
அண்மையில் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி மற்றும் தமிழக மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்றது. இதில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை கிலோவிற்கு ரூ.6.50 என்பதை பண்ணை பராமரிப்பு செலவு அதிகரிப்பு, பண்ணை தொழிலாளர்கள் கூலி உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளால் கிலோவிற்கு ரூ.20 என அடிப்படை உற்பத்தி கூலியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டுக்கோழி வளர்ப்புக்கு கிலோ ரூ.25, காடை ஒன்றுக்கு ரூ.7 கூலியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு செய்யப்பட்டு அறிவித்தனர்.
அதன்படி நேற்று முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை விவசாயிகள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். இதனால் உற்பத்தி குறைந்து கறிக்கோழி கொள்முதல் விலை தற்போதைய விலையை விட மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலைமை எழுந்துள்ளது. எனவே, இந்த பிரச்சனையில் அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications