இதுதான் தமிழ்நாடு.. தேரோட்டத்தில் பக்தர்களுக்கு கேசரி வழங்கிய இஸ்லாமியர்.. அவிநாசியில் நெகிழ்ச்சி
திருப்பூர்: தமிழ்நாட்டில் மதுரை உள்பட பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பல இடங்களில் தேரோட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் ஏராளமான பக்தர்களுக்கு கேசரி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல கோவில்களில் தேர், சப்பரம் ஊரை பவனி வருவது முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

குறிப்பாக மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இன்று பல்வேறு இடங்களில் தேரோட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பெரும் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வேளையில் இஸ்லாமியர் ஒருவர் பக்தர்களின் பசியை போக்கும் வகையில் கேசரி தயாரித்து வழங்கினார். அதாவது வடக்கு ரத வீதியில் தேர் வலம் வந்தது. அப்போது காதர் மைதீன் என்பவர் பக்தர்களுக்கு கேசரி வழங்கினார். இதுபற்றி காதர் மைதீன் கூறுகையில், ‛‛நானும் எனது மனைவியும் தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி கேசரி வழங்கி பக்தர்களுக்கு வழங்கினோம். இது என்னால் முடிந்த சிறிய சேவையாகும்'' என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தான் இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மதத்தின் பெயரில் பிரிவினை என்பது வேண்டாம். அனைவரும் மனிதர்களே என்பதை எடுத்து காட்டும் வகையில் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாய் காதர் மைதீன் செயல்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அவிநாசியில் இன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பக்தர்களுக்கு கேசரி தயாரித்து வழங்கிய காதர் மைதீன் இறைச்சி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications