"கோர்ட்டுக்கு அலைய வச்சிருவேன்" பறக்கும் படையினரை மிரட்டிய பாஜக ஏபி முருகானந்தத்தின் நிலை என்ன?
திருப்பூர்: தேர்தல் பிரசாரத்தின் போது பறக்கும் படையை மிரட்டிய, பாஜகவின் ஏ.பி.முருகானந்தம் போட்டியிட்ட திருப்பூர் லோக்சபா தொகுதியின் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருந்தது. எனவே வாக்காளர்களுக்கு விநியோகிக்க பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தன.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் வந்துகொண்டிருந்தார்.
அவரது வாகனத்தை பறக்கும் படையினர் மடக்கினர். இவரது காருக்கு பின்னால், டிராபிக் ஜாம் ஆனதால் காரை ஓரம் கட்டுமாறு கூறினர். இதை கேட்டு உடனே கொதித்தெழுந்த ஏ பி முருகானந்தம் கண்காணிப்பு நிலைக்குழுவினரை மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரை ஓரமாக நிறுத்தியதும், கண்காணிப்பு அலுவலரை பார்த்து,
“உங்க பெயர் என்னன்னு சொல்லுங்க.. என்னவாக இருக்கீங்க? இப்படித்தான் உங்களை மிரட்ட சொன்னாங்களா? எந்த மனிதராக இருந்தாலும் முதலில் மரியாதையாக சொல்லுங்க.. மரியாதையாக பேசி பழக வேண்டும்.. புரியுதா? இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன். சரியா?” என்று மிரட்டியிருந்தார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஏ.பி.முருகானந்தத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. மாலை 5 மணி நிலவரப்படி, முருகானந்தம் போட்டியிட்ட திருப்பூர் தொகுதியில், சிபிஐ வேட்பாளர் கே.சுப்பராயன் 3,86,542 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதேபோல, அதிமுகவின் அருணாச்சலம் 2,83,953 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பறக்கும் படையினரை மிரட்டிய ஏ.பி.முருகானந்தம் 1,50,498 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
திருப்பூர் அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாக இருந்தாலும், சமீப காலமாக திமுக மற்றும் சிபிஐ ஆதரவு பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. இம்முறை தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடாமல் பாஜக, அமுதிக களம் காண்பதும் சிபிஐ வேட்பாளருக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது.
முந்தைய தேர்தல் முடிவுகளை பொறுத்த வரை கடந்த 1951ல் தொடங்கி 2019 வரை, 17 லோக்சபா தேர்தல்கள் இந்த தொகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் 8 முறை அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் அதிக வெற்றிகளை பெற்ற கட்சியும் இதுதான். இதனை தொடர்ந்த காங்கிரஸ் 5 முறை இந்த தொகுதியில் வென்றிருக்கிறது. இது தவிர திமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications