Dharapuram: வாக்குச்சாவடியில் திடீர் மின்வெட்டு.. செல்போன் வெளிச்சத்தில் வாக்களித்த வாக்காளர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் சட்டாமன்றத் தொகுதி வீராச்சிமங்கலத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் இன்று திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டால் வாக்குச்சாவடிக்குள் வெளிச்சமே இல்லாத அளவுக்கு இருட்டானது. இதையடுத்து, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. தாராபுரம் தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 825 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.

Dharapuram By-Election Power Cut at Polling Station Voters Cast Votes Using Flashlights

இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தமிழக வெற்றிக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர்.
22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 பேலட் யூனிட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 ஆயிரம் காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் நீண்ட வரிசையில் இன்று ஏராளமான பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். 9 மணி நிலவரப்படி தாராபுரம் தொகுதியில் 17.55% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், வீராச்சிமங்கலத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் மின் வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டால் வாக்குச்சாவடிக்குள் வெளிச்சமே இல்லாத அளாவுக்கு இருட்டானது. இதையடுத்து, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களிலும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+