திருப்பூரில் ரூ.50 லட்சம் நிலத்தில் விழுந்த அரசியல்வாதி.. குறுக்கே வந்த தாராபுரம் சத்யபாமா.. ஓ காட்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது... இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்த நிலையில், இந்த குற்றத்தில் ஈடுபட்டது இந்த அரசியல்வாதியா? என்று திகைத்து போய்விட்டனர்.. போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்தவர் இவரா? என்றும் ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள்.. என்ன நடந்தது திருப்பூரில்?
தாராபுரம் கச்சேரி வீதி சக்தி நகரை சேர்ந்தவர் குறிஞ்சிவேந்தன்.. இவருக்கு 63 வயதாகிறது.. ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் ஆவார்.

ரிடையர் ஆகிவிட்ட பிறகு, கரூர் சாலையில் நாற்றுப்பண்ணையை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார் குறிஞ்சிவேந்தன்.. கடந்த 2008-ல் தாராபுரம் கரூர் சாலை காளிபாளையம் அருகே தங்கவேல் என்பவரிடம் இருந்து ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
திருப்பூர் விவசாய நிலம்
இந்நிலையில் அந்த நிலத்திற்குள், தன்னுடைய 10 சென்ட் இடம் இருப்பதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஒட்டன்சத்திரம் கூத்தம்பூண்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருப்பூர் எஸ்பியிடம் புகார் செய்தார்.
போலீசாரும் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டபோது, உரிய ஆவணங்களை மாவட்ட காவல்துறையில் தாக்கல் செய்து, கோர்ட்டில் இதை தீர்த்து கொள்கிறோம் என்று அப்போதைய வன அலுவலரான குறிஞ்சிவேந்தன் சொல்லிவிட்டாராம்.. இதனால் இந்த வழக்கு முடித்து அப்போதே வைக்கப்பட்டது.
இதற்கு பிறகு குறிஞ்சிவேந்தன், இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் விசாரணையை நடத்தி வந்துள்ளார்.. அப்போதுதான் தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, செல்வராஜ் அவரது சகோதரரும் கால்நடை டாக்டருமான சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த மோசடியை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.
ரூ.10 லட்சம் - பக்கா பத்திரம்
அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தங்கவேல் மற்றும் அவரது வாரிசுகள் உயிருடன் இருப்பதாக போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டதை கண்டுபிடித்தார்.. இந்த போலி சான்றிதழை செல்வராஜின் சகோதரரும் கால்நடை டாக்டருமான சுரேஷ்குமார் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த சான்றிதழை பயன்படுத்தி 2018-ல் சார்பதிவாளர் கண்ணன் உதவியுடன் போலி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறிஞ்சிவேந்தன் கண்டுபிடித்துள்ளார்..
தங்களது குட்டு மொத்தமும் வெளிப்பட்டுவிட்டதை அறிந்த முன்னாள் எம்எல்ஏவின் மனைவியும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான சத்தியபாமா, தங்களை பற்றி போலீசில் புகார் செய்ய கூடாது என்று குறிஞ்சிவேந்தனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தாராபுரம் அரசியல்வாதி
ஆனால் குறிஞ்சிவேந்தன் எதற்குமே அஞ்சாமல், தாராபுரம் போலீசில் புகார் அளித்துவிட்டார்.. இந்த புகாரின்பேரில்தான் முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி அவரது மனைவி சத்தியபாமா செல்வராஜ் சுரேஷ்குமார் மற்றும் சார்பதிவாளர் கண்ணன் ஆகிய 6 பேர் மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார்..
அதற்குள் இந்த விஷயம் தெரிந்ததுமே பொன்னுச்சாமி, தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளாராம்..
சத்தியபாமா சென்னையில் தனது மகள் வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த வழக்கு தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் சம்பவம்
இதனிடையே அரசியல்வாதி செய்த இந்த மோசடி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நில அபகரிப்பு குறித்த புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல்வாதிகளே இப்படி செய்யலாமா? உண்மை வெளிவர வேண்டும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications