திருப்பூர் அருகே மின் மோட்டார் அறையை பூட்டிய திமுக கவுன்சிலரின் மாமனார்.. நடுரோட்டில் வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் 5-வது வார்டில் மின் மோட்டார் அறையை திமுக கவுன்சிலரின் மாமனார் பூட்டியதாக குற்றம்சாட்டிய பெண், தன்னை கவுன்சிலரின் மாமனார் தண்ணீர் பிடிக்க விடாமல் ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டினார். இதனிடையே திமுக கவுன்சிலரின் மாமானார், பொதுமக்களிடம் நடுரோட்டில் கடும் வாக்குவாதம் செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பாதிக்கப்பட்டதாக கூறப்படும் லலிதா என்ற பெண் அளித்த பேட்டியில், "என் பெயர் லலிதா, நான் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து பேசுகிறேன்.. காங்கேயத்தில் உள்ள ஐந்தாவது வார்டில் குடியிருக்கிறேன்.. எங்கள் வார்டின் கவுன்சிலர் பெயர் மீனாட்சி.. 24 மணி நேரமும் தண்ணீர் பிடிக்கலாம் என்று அவங்க சொன்னார்கள். ஆனால் நான் இந்த வீதிக்கு குடிவந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. ஆனால் குடிநீர் குழாயில் நான் தண்ணீர் பிடித்தது இல்லை.. வரிக்கட்டி கொண்டுதான் வருகிறேன். எனக்கு போர் ரிப்பேர் ஆகிவிட்டது.

tirupur dmk councillor

இத்தனை நாட்களாக நான் போர் தண்ணீரைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். போர் ரிப்பேர் ஆனதால் பொதுபைப்பில் தண்ணீர் பிடிக்க வந்தேன்.. அங்கு இரண்டு நாட்களாக தண்ணீர் வரவில்லை.. இரண்டு வீதிக்கு மட்டும் தான் தண்ணீர் வரும் என்று சொல்லியிருக்காங்க.. இந்நிலையில் நேற்று காலையில் 9.30 மணிக்கு பொதுக்குழாய் போரில் தண்ணீர் போட்டேன்.. ஆனால் நான் தண்ணீர் எடுக்கவே இல்லை.. நான்கு குடம் தான் தண்ணீர் பிடித்தேன். நான்கு குடத்துடன் தண்ணீர் நின்றுவிட்டது. தண்ணீர் எங்கே போனது என்றே தெரியவில்லை.. நான் காலையில் போருக்கான மோட்டார் ஸ்விட்சை போட வந்த போது, என்னை திமுக கவுன்சிலரின் மாமனார் அவமரியாதையாக பேசினார்.

ஏம்மா, நீ யாரு.. நீங்க எல்லாம் வந்து போர் ஸ்விட்ச் போடக்கூடாது.. அவங்க அவங்க சவுரியத்திற்கு மோட்டார் ஸ்விட்ச் போடக்கூடாது என்றார். அப்போது நான் அவரிடம் இன்னொரு வீதியில் தண்ணீர் பிடிக்கும் சங்கர் என்பவரிடம், மற்றொரு வீதியில் பிடிக்கும் திலகவதி என்பவரிடமும் கேட்டுவிட்டுத்தான் மோட்டார் போட்டேன் என்று கூறினேன்.. அத்துடன், ஐயா, யார் என்ன என்று தெரியாமல் நீங்கள் இப்படி பேச வேண்டாம் என்றும் கூறினேன்.

அப்போது அவர் என்னிடம், அவள், இவள் எல்லாம் இங்கு மோட்டார் போடுவதற்கு அனுமதி இல்லை.. நான் பூட்டு போடுவேன்.. உங்கள் சௌரியத்திற்கு தண்ணீர் பிடிக்கக்கூடாது என்றார். அவரிடம் நான் தண்ணீர் இல்லை.. இரண்டு நாட்களாக குடம் எடுத்து வந்து திரும்பி போனேன் என்றேன். அவர் அப்போது தண்ணீர் வரவில்லை என்றால், நீ எங்காவது போ என்று என்னை விரட்டுகிறார்.. தண்ணீர் வரவில்லை..

அதற்கு நியாயம் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, இன்று கவுன்சிலரம்மா வந்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.. சமாதானமாக போக வேண்டும் என்கிறார். ஆனால் என்னுடைய வீதியில் தண்ணீர் பிடிக்கவே கிடையாது.. இதற்கு தான் நான் நியாயம் கேட்கிறேன்.. வீடு வீடுக்கு பைப் உள்ளது. என் வீட்டு பைப்பில் மட்டும் தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் நான் 10வது வார்டில் உள்ள வீதியில் போய் தான் தண்ணீர் பிடிக்கிறேன்.. இதுதான் என்னுடைய நிலைமை" இவ்வாறு லலிதா என்பவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+