இது அடுத்த டிவிஸ்ட்.. முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவோம்..மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
Recommended Video
திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே முதலீடுகளை திரட்டியிருந்தால் திமுக சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல மண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்த பின்பு உரையாற்றிய அவர் இதனைக் கூறினார். தவறான பொருளாதார கொள்கைகளால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மனம் திறந்து பேசியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அனைத்துக் கட்சி தலைவர்கள் எல்லாம் மேடையில் இருப்பதால் நாகரீகம் கருதி அரசியல் பேச விரும்பவில்லை என்றார். பின்னர் அரசியல் பேசாமல் சென்றால் வெள்ளக்கோவில் சாமிநாதன் தன்னை கோபித்துக்கொள்வார் எனக் கூறிய அவர், தமிழக அரசை பற்றி ஒரு பிடிபிடித்தார்.
அமெரிக்காவிற்கு சென்று அங்கு அப்பட்டமான பொய் ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறும் தமிழக அரசு, எங்கே யாருக்கு வேலை அளித்துள்ளது எனக் கூற முடியுமா என சவால் விட்டார்.
இந்நிலையில் தமிழகத்தில் 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் அப்பட்ட பொய் ஒன்றை முதல்வர் கூறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், உண்மையிலேயே தமிழகத்துக்கு முதலீடுகளை முதலமைச்சர் பெற்றிருந்தார் என்று சொன்னால், திமுக சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்த தயங்கமாட்டோம், ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் பேசினார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications