Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல விஐபி.. 52 பேரா? தமிழ்ச்செல்வியும், திருப்பூர் சத்யாவின் அந்தரங்கமும்.. அழுதுகொண்டே சொன்ன சொல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் சத்யா கைதாகியிருக்கும் சூழலில், அவரது மோசடி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அத்துடன், தமிழ்ச்செல்வி என்பவர் பெயரும் இந்த விவகாரத்தில் அடிபட்டுள்ளது.. யாரிந்த தமிழ்ச்செல்வி?

கடந்த ஒரு வார காலமாகவே சோஷியல் மீடியாவில் சத்யா என்ற 30 வயது பெண்ணின் பெயரும், அவரது போட்டோவும் வைரலாகி கொண்டிருக்கிறது.. கல்யாண மோசடி காரணமாக தற்போது சத்யா கைதாகி இருக்கிறார்.

Tiruppur Sathya Tirupur Marriage

தாராபுரம்: தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி ஓனர் ஒருவருக்கு, 30 வயதாகியும் திருணமாகவில்லை.. அதனால் இணையதள ஆப் மூலம், வரன் பார்த்தபோதுதான், கொடுமுடியை சேர்ந்த 30 வயது சத்யா என்பவர் அறிமுகமானார். இரு தரப்பிலுமே பயோடேட்டாவை பரிமாறிக்கொண்டதுடன், போனிலும் இருவரும் பேசி வந்தனர்.

தன்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதால், உடனடியாக கல்யாணத்தை செய்து கொள்ளலாம் என்றும் பேக்கரி ஓனரிடம் சத்யா சொல்லி உள்ளார்.. எனவே, அடுத்த சில நாளிலேயே இருவரும் மாலை மாற்றி கல்யாணம் செய்து கொண்டனர். கல்யாணம் திடீரென நடந்துவிட்டதால், மணமகள் சத்யாவுக்கு, தங்க நகைகளை வாங்கி அணிந்து, மாப்பிள்ளை வீட்டில் அழகுபார்த்தனர்.

சந்தேகம்: புதுமண தம்பதி மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினாலும், சத்யாவின் நடவடிக்கையில் பேக்கரி ஓனருக்கு சந்தேகம் கிளம்பியது.. அதாவது சத்யா பெயரை ரேஷன் கார்டில் இணைக்க முயன்றாராம் பேக்கரி ஓனர்.. அப்போது சத்யாவின் கணவராக இன்னொருவர் பெயர் பதிவாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்..

பிறகு தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக சத்யாவின் சொந்த ஊரில் விசாரிக்க ஏற்பாடு செய்தார். அப்போதுதான் சத்யாவின் சுயரூபம் தெரியவந்துள்ளது.. இது தொடர்பாக சத்யாவிடம் கேட்டதற்கு "கொலைவெறித்தனத்துடன்" சத்யா மிரட்டியதை பார்த்து பேக்கரி ஓனர் மிரண்டு போய்விட்டாராம்.

அப்போதுதான், சத்யாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை இருப்பது தெரியவந்தது. இறுதியில், நகைக் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் சொல்லி சத்யாவை தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் பேக்கரி ஓனர். ஆனால் வாசலிலேயே சுதாரித்துக்கொண்ட சத்யா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். தாராபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பேக்கரி ஓனர் புகார் தந்ததையடுத்து, விசாரணை ஆரம்பமானது. அப்போதான் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை சத்யா அபேஸ் செய்தது தெரியவந்தது.

விசாரணை: அதற்கு பிறகு போலீஸார் கண்ணில் அவர் சிக்கவில்லை. எனவே, சத்யாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்றைய தினம், சத்யாவின் செல்போன் சிக்னல் புதுச்சேரியை காட்டவும், போலீசார் அங்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தனர்.. அங்கு தோழியின் வீட்டில் பதுங்கி இருந்தாராம் சத்யா.. பிறகு தாராபுரம் அழைத்து வந்து சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போதுதான் சத்யா சொன்னதை கேட்டு போலீசாருக்கு தலையே சுற்றிவிட்டதாம். 10 வருடத்தக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருண் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் சத்யா.. அவருடனும் சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு, கரூரை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.. கார்த்திக்கையும் உதறி தள்ளிவிட்டு, மாட்டு வியாபாரி மகன் பிரகாஷை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.

ராஜேஷ்: பிறகு 2012-ல் ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்துள்ளார். அதன்விளைவாக இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.. இதற்கு பிறகுதான் தாராபுரம் பேக்கரி ஓனர் சத்யாவிடம் சிக்கியிருக்கிறார்.. உண்மையிலேயே சத்யா 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்தாரா? என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சத்யா மீது கொலை முயற்சி மற்றும் ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

ஆனால், சத்யாவிடம் விசாரணை மேற்கொண்டபோதுதான் தமிழ்ச்செல்வி என்பவர் பெயர் அடிபட்டது. சத்யாவுக்கு புரோக்கராக செயல்பட்டவர்தான் இந்த தமிழ்ச்செல்வி.. கரூர் மாவட்டம் தாந்தோன்றி மலையை சேர்ந்தவராம்..

கடந்த வாரமே தமிழ்ச்செல்வியையும் பிடித்து தாராபும் போலீசார் விசாரித்திருக்கிறார்கள்.. ஆனால், முழு விவரங்களை தமிழ்ச்செல்வி போலீசில் அப்போது சொல்லவில்லையாம்..

போலீஸ் வலை: ஆனால், விசாரணைக்கு எப்போது அழைத்தாலும், ஒத்துழைப்பு தருவதாக சொல்லி அங்கிருந்து நழுவி சென்ற தமிழ்ச்செல்வி, அதற்கு பிறகு தலைமறைவாகிவிட்டார்.. அவரை போலீசார் இன்னமும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. தமிழ்ச்செல்வியையும் கைது செய்தால்தான் இன்னும் எத்தனை பேருக்கு சத்யாவை திருமணம் செய்து கொடுத்தார் என தெரியவரும் என்று போலீசார் சொல்கிறார்கள்.

ஒவ்வொரு பதிவு திருமணத்துக்கு பிறகும் ஏதாவதொரு பிரச்சினையை கிளப்பி சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்கள் வாயாலேயே விவாகரத்து கேட்கும் அளவுக்கு சாமார்த்தியமாக பேசுவாராம் சத்யா..

சத்யா: விவாகரத்து கேட்டால், பணம் கேட்டு மிரட்டுவதும் அதன் மூலமாக பணம் பறிப்பதையும் தொழிலாகக் கொண்டிருந்தாராம். இப்படி 52க்கும் மேற்பட்ட ஆண்களை சத்யா ஏமாற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.. ஆடு மேய்ப்பவர், காவல் உதவி ஆய்வாளர், தொழிலதிபர், சர்வேயர், அரசியல்வாதி என பலர் சிக்கி பணத்தை இழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாம். எனவே, சிறையிலுள்ள சத்யாவிடம் விசாரணை நடத்தினால்தான், இதுகுறித்த உண்மைத்தன்மை தெரியவரும் என்கிறார்கள்.

நேற்றைய தினம் சத்யாவை போலீஸார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, பிறகு திருப்பூர் சிறைக்கு கொண்டு செல்ல முயன்றார்.. அப்போது போலீஸ் ஜீப்பில் ஏறும்போது போலீசாரை பார்த்து சத்யா, "சார்.. என்கிட்ட இருக்கும் ஆதாரத்தையெல்லாம் காட்டுறேன்.. உங்களிடம் விளக்குகிறேன்.. ஆனால், தயவுசெய்து என்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்தாதீங்க" என்று அழுதுகொண்டே சொன்னார். அதற்கு போலீசார், அப்படியெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+