"ஒருநாள்" மனைவி.. வாடகைக்கு அக்கா.. ட்விஸ்ட் மேல் ட்விட்ஸ்ட்.. இளைஞருக்கு ஷாக் தந்த 5 பெண்கள்..!
திருமண மோசடி வழக்கில் 5 பெண்கள் கைதாகி உள்ளனர்
திருப்பூர்: மொத்தம் 5 பெண்கள் சேர்ந்து, இளைஞர் ஒருவரை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.. இப்போது 5 பெண்களும் சிறைக்குள் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.. அதனால் புரோக்கர்கள் மூலம் பெண் தேடி வந்தார்.
அந்த வகையில், அம்பிகா என்ற பெண் புரோக்கர் இவருக்கு அறிமுகமானார்.. ரீசா என்ற பெண் இருப்பதாகவும் சொல்லவும், அவரை திருமணம் செய்ய ராஜேந்திரன் நினைத்தார்.. ஆனால், அதற்குள் ஏகப்பட்ட கண்டிஷன்களை அம்பிகா ராஜேந்திரனிடம் விதித்துள்ளார்.

புரோக்கர்கள்
"ரீசா ரொம்ப நல்ல பெண், அவருக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை, உறவினர்களும் இல்லை.. அதனால் நகை, பணம் எல்லாவற்றையும் கல்யாணத்துக்கு மாப்பிள்ளைதான் வாங்கி தர வேண்டும் என்று சொன்னார்.. மேலும் தன்னுடைய புரோக்கர் கமிஷனாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்... அனைத்து கண்டிஷன்களுக்கும் ராஜேந்திரன் ஒப்புக் கொண்டார்..

அக்கா
கடந்த மாதம் 24ம் தேதி வீட்டு பெரியவர்கள் முன்பு ரீசாவை திருமணம் செய்து கொண்டார்.. .. பெரும்பாலும் ராஜேந்திரன் வீட்டு தரப்பில் இருந்துதான் உறவினர்கள் கலந்து கொண்டனர். ரீசா தரப்பில் பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம் மட்டுமே கலந்து கொண்டனர்... ஆனால், கல்யாணம் முடிந்த மறுநாளே ரீசாவை காணோம்.. வீட்டில் அவர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் குழப்பமடைந்தார்.

காணவில்லை
ரீசாவின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் புரோக்கர் அம்பிகாவுக்கு போன் செய்துள்ளார்.. ரீசாவை காணோம் என்று சொன்னால், அதற்கு பெரிய அளவில் அவர் அதிர்ச்சி அடையவில்லை.. சரியான பதிலும் சொல்லவில்லை. இது ராஜேந்திரனுக்கு மேலும் குழப்பத்தை தந்தது. அப்போதுதான், கட்டிய தாலி, பட்டுப்புடவையோடு ரீசா வீட்டை விட்டு சென்றுள்ளது தெரியவந்தது..

குழந்தைகள்
உடனே ரீசாவை பற்றி விசாரித்துள்ளார்.. அங்கே அதைவிட ஷாக் செய்தி காத்திருந்தது.. அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. இந்த கல்யாணத்தில் நாம் மொத்தமாக ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிந்து அதிர்ந்து போனார் ராஜேந்திரன்.. அதைவிட இன்னொரு ஷாக் இருந்தது, கல்யாணத்தில் கலந்து கொண்ட பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம், இருவரும் வாடகைக்கு அழைத்து வரப்பட்டவர்களாம்..

கைது
இதையடுத்து, மணப்பெண், புரோக்கர் அம்பிகா, இன்னொரு புரோக்கர் வள்ளியம்மாள், தேவி, தங்கம் உட்பட 5 பெண்கள் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை அறிந்த ராஜேந்திரன், குன்னத்தூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட 5 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications