இந்தி தெரியாது போடா.. அந்த சட்டை டிசைன் யாரோடது தெரியுங்களா.. இதோ இவர்தாங்க!
திருப்பூர்: கடந்த வார இறுதியில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் தமிழர்களை கட்டிப்போட்டது ''இந்தி தெரியாது போடா'', ''நான் தமிழ் பேசும் இந்தியன்'' என்ற வாசகங்கள் அடங்கிய டி சர்ட்தான். இந்த டி சர்ட்டை வடிவமைத்தவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த டி சர்ட்டை தமிழ் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் அணிந்த புகைப்படங்கள் வைரலாகி இருந்தது. இதைப்பார்த்து பலரும் ஆர்டர் செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து இருந்தனர்.

இந்த டி சர்ட்டை வடிவமைத்தவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராக இருக்கிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இந்த டி சர்ட்களுக்கு திமுக எம்பி கனிமொழி ஆர்டர் கொடுத்து இருந்தாராம்.
துவக்கத்தில் வெறும் 1,500 டி சர்ட்டுகளுக்கு மட்டுமே ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்களும் அணிந்து வைரலானது. இதையடுத்து பலரும் ஆர்டர் கொடுத்துள்ளதாக கார்த்திகேயன் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு 15,000க்கும் அதிகமான டி சர்ட்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாம். இந்தியா மட்டுமின்றி கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகிறதாம்.
Recommended Video
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications