திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருப்பூர் ‘மசூதி’ சர்ச்சை: ‘இந்து முன்னணி’ கலவரம் செய்ய சதி - எச்சரிக்கும் திமுக எம்எல்ஏ

Google Oneindia Tamil News

திருப்பூர்: இந்து முன்னணி போன்ற ஒருசில அமைப்புகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறார்கள் என்றும் அதற்கு சிறுபான்மை மக்கள் பலியாகி விட கூடாது எனவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எச்சரித்து உள்ளார்.

Recommended Video

    கோர்ட் உத்தரவு.. திருப்பூரில் மசூதிக்கு ”சீல்” வைக்க சென்ற அதிகாரிகள்.. இஸ்லாமியர்கள் போராட்டம்

    திருப்பூர் வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

    தமிழக மீனவர்கள் கைது- வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசு- வைகோ கண்டனம் தமிழக மீனவர்கள் கைது- வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசு- வைகோ கண்டனம்

    இந்த நிலையில் குடியிருப்பதற்கான உரிமத்தை மட்டுமே பெற்றுவிட்டு மத வழிபாட்டுத் தலமாக மாற்றியதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி வந்தது

     இஸ்லாமியர்கள் போராட்டம்

    இஸ்லாமியர்கள் போராட்டம்

    இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது . இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2 ஆம் தேதி பள்ளிவாசலுக்கு சீல் வைக்க அதிகாரிகள் சென்றனர். இதனை கண்டித்து திருப்பூர் மாநகரம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆங்காங்கே போராட்டங்களிலும் பேரணியிலும் ஈடுபட்டனர். பள்ளிவாசலுக்கு சீல் வைப்பதை எதிர்த்து இஸ்லாமியர்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

    அனைத்துக் கட்சி ஆலோசனை

    அனைத்துக் கட்சி ஆலோசனை

    அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 3 நாள் அவகாசம் வழங்கியது. இந்த நிலையில் பள்ளிவாசல் பிரச்சனை தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

    திமுக எம்எல்ஏ செல்வராஜ்

    திமுக எம்எல்ஏ செல்வராஜ்

    இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், "தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக தமிழக அரசு இருந்து வருகிறது. இந்து முன்னணி போன்ற ஒருசில அமைப்புகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறார்கள். எனவே அதற்கு சிறுபான்மை மக்கள் பலியாகி விட கூடாது.

    சிறுபான்மையினருக்கு எச்சரிக்கை

    சிறுபான்மையினருக்கு எச்சரிக்கை

    அவர்களுக்காக மதச்சார்பற்ற அமைப்புகளும் கட்சிகளும் உறுதுணையாக நிற்கும். இந்த பள்ளிவாசல் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. அது எப்போது முடியும் என்று தெரியாது. எனவே அதுவரை சில விஷமகர சக்திகளின் சதிகளுக்கு சிறுபான்மை மக்கள் ஆளாகி விடக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளபட்டுள்ளது. அனைத்து அமைப்புகளும் அதனை ஏற்று கொண்டனர்." என்று தெரிவித்தார்.

    English summary
    Hindu Munnani planned for riot on Tiruppur Mosque issue - DMK MLA Selvaraj warns: இந்து முன்னணி போன்ற ஒருசில அமைப்புகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறார்கள் என்றும் அதற்கு சிறுபான்மை மக்கள் பலியாகி விட கூடாது எனவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எச்சரித்து உள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X