மனைவி மீது கொள்ளை ஆசை.. மனைவிக்கு விஏஓ சுரேஷ் மீது ஆசை.. சேலையில் தூக்கு போட்டு தொங்கிய கணவன்!
மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார்
திருப்பூர்: மனைவி மேல் கொள்ளை பிரியம்.. ஆனால் மனைவிக்கு விஏஓ மீது பிரியம்.. சொல்லி சொல்லி பார்த்த கணவன் தற்கொலையே செய்து கொண்டார்.. உயிருக்குயிரான தன் மனைவியின் சேலையிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு பெண் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.. அவருக்கு வயது 34.
இவரது கணவர் வேலுசாமி.. அவருக்கு வயது 49.. கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர்... இவர்கள் லவ் மேரேஜ் செய்து கொண்டவர்கள்.. ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

விஏஓ சுரேஷ்
இந்நிலையில் மாம்பாடி விஏஓ-வாக வேலை பார்ப்பவர் சுரேஷ்.. அவருக்கு வயது 40 ஆகிறது.. சுரேஷுடன் வேலுச்சாமியின் மனைவிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது வேலுச்சாமிக்கு தெரிந்து, பலமுறை மனைவியை எச்சரித்தார்.. விஏஓ உடனான பழக்கத்தை நிறுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்த கள்ள உறவை வைத்தே தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.

ஊர் சுற்றினர்
அதனால் 8 மாசத்துக்கு முன்பு கோபித்து கொண்டு வேலுசாமி மனைவி வீட்டைவிட்டு வந்துவிட்டார்.. தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு குழந்தைகளுடன் வசித்துள்ளார்.. ஆனாலும் விஏஓ உறவை துண்டிக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய மனைவிக்கு இன்னும் வசதியாக போயிற்று. பல இடங்களில் விஏஓவுடன் சுற்றி திரிந்துள்ளார். இதை ஊர்க்காரர்கள் பார்த்து, நேரடியாக வேலுச்சாமியிடம் வந்து விசாரித்துள்ளனர்.

அவமானம்
யாரை பார்த்தாலும் மனைவி குறித்து புகார் சொல்லியபடியே இருந்தனர்.. இது வேலுச்சாமிக்கு அவமானமாக போய்விட்டது. அதனால் வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.. மறுநாள் வரை கதவே வேலுச்சாமி திறக்கவில்லை. அக்கம் பக்கத்தினர்தான் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.. அப்போது வேலுச்சாமி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தொங்கியபடி கிடந்தார்.

உருக்கமான கடிதம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக தாராபுரம் போலீசில் புகார் தந்தனர்.. சடலத்தை மீட்ட போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, தற்கொலைக்கு முன்பாக வேலுச்சாமி தன் கைப்பட உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், தன் சாவுக்கு மாம்பாடி விஏஓ சுரேஷ்தான் காரணம் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

மனைவியின் சேலை
இதனையடுத்து சுரேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்... சுரேஷூக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதும்... வேலுச்சாமி மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டதும் உண்மைதான் என்பது தெரியவந்தது... இப்போது சுரேஷை கைது செய்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மனைவி மீது அதிகமான பிரியம் வைத்திருந்தவர் வேலுச்சாமி.. அதனால்தான் அவரது சேலையிலேயே தூக்கு போட்டு தொங்கிவிட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications