சங்கீதாவை சமாளிக்கவே முடியலை.. உள்ளே நுழைந்து கதவை பூட்டிக் கொண்டு.. விவேக் எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் அருகே பெண் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சங்கீதாவை சமாளிக்கவே முடியவில்லை.. ஒருகட்டத்தில் அவரது தொல்லை தாங்க முடியாமல், சங்கீதாவின் வீட்டுக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார் கள்ளக்காதலன் விவேக்.. வாய் நிறைய விஷ மாத்திரைகளை அவரது வாயில் திணித்தும், கழுத்தை நெரித்தும் சங்கீதாவை கொலை செய்தார்.. தற்போது இந்த இளைஞரை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்!

திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்த தம்பதி யுவராஜ் - சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

 lockdown crime: woman killed by her boy friend near tiruppur

சங்கீதாவுக்கு வயது 33 ஆகிறது.. பியூட்டி பார்லர் ஒன்று வைத்துள்ளார்.. இந்நிலையில், 28 வயது விவேக்குடன் சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.. இவர்களின் காதல் ஒரு வருஷமாகவே அளவுக்கு அதிகமாக வளர்ந்தது.. பலமுறை ஜாலியாக இருந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் கணவனை டைவர்ஸ் செய்துவிட்டு, விவேக்கை இன்னொரு கல்யாணம் செய்ய சங்கீதா முடிவு செய்தார்.. இதை பற்றி விவேக்கிடமும் சொன்னார்.. ஆனால் அவர் காதிலேயே வாங்கவில்லை.. வெறும் ஜாலிக்காக மட்டுமே சங்கீதாவிடம் பழகி வந்தார்.

நாளுக்கு நாள் கல்யாணம் செய்து கொள்ளும்படி சங்கீதா தொல்லை அதிகமானதும், அவரால் சமாளிக்கவே முடியவில்லை.. அதனால், கொலை செய்ய முடிவு செய்து, 9ம் தேதி நைட் சங்கீதாவின் வீட்டுக்குள் விவேக் அதிரடியாக நுழைந்தார்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் யுவராஜ், குழந்தைகளை எழுப்பி, வெளியே பிடித்து தள்ளி உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.. அதிர்ச்சியுடன் இதை பார்த்து கொண்டு நின்றிருந்த சங்கீதாவுக்கு விஷமாத்திரை வாயில் திணித்து தள்ளினார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல் சங்கீதாவின் கழுத்தையும் பிடித்து நெறித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இறுதியில் மிச்சமிருந்த விஷமாத்திரையை தானும் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. வீட்டுக்கு வெளியே யுவராஜ் கதவை எட்டி உதைத்து கொண்டிருந்த நேரத்தில் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது.. பிறகு யுவராஜ் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் ஜன்னலை உடைத்து கொண்டு உள்ளே போனார். அப்போதுதான் சங்கீதா பிணமாக விழுந்து கிடப்பதை கண்டு அலறினார்.

அவருக்கு பக்கத்திலேயே விவேக்கும் மயங்கி கிடந்தார்.. பொதுமக்கள் அவரை மீட்டு உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. இதனிடையே விவேக்குக்கு சிகிச்சை முடிந்த தகவல் அறிந்ததும், அவரை கைது செய்துள்ளனர். விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. சங்கீதாவின் ஓவர் டார்ச்சராலேயே இவ்வாறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+