Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் அரசு பஸ்ஸில் பாருங்க, சர்னு டிக்கெட்டை கிழித்து..  கலக்கும் முதல் பெண் கண்டக்டர் கோகிலா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி கொண்டிருக்கிறார்கள்.. எந்தத் துறையிலும் பெண்கள் தங்களின் திறமையை நிரூபித்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.. அந்த வகையில், வழக்கமாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் அரசுப் பேருந்து நடத்துநர் பணியில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் களமிறங்கி சாதித்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது..

திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் செல்லும் அரசு நகரப் பேருந்தில், (பஸ் ரூட் நம்பர் 9J) கடந்த இரண்டு வாரங்களாகக் கண்டக்டராகக கோகிலா என்ற பெண் பணியாற்றி வருகிறார்..

திருப்பூர் அரசு பஸ்

இவருக்கு வயது 32,. திருப்பூரில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இதுவரை ஆண்கள் மட்டுமே கண்டக்டர்களாக பணியாற்றி வந்த நிலையில், ஒரு பெண் ஆர்வமுடன் இந்தப் பணியில் சேர்ந்திருப்பது சக பணியாளர்கள் மற்றும் பயணிகள் இடையே பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

இவரது இந்தப் புதிய முயற்சியைப் பாராட்டி, பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகள் பலர் கோகிலாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்..

முதல் பெண் கண்டக்டர்

இதுகுறித்து நடத்துநர் கோகிலா சொல்லும்போது, "நான் எம்.ஏ. வரை படித்துள்ளேன்.. எனது அப்பா ராமலிங்கம், நம்பியூர் கிளையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார்.. அவரது இறப்பால் இப்போது எனக்கு வாரிசு அடிப்படையில் இந்தப் பணி கிடைத்துள்ளது.." என்று தனது பின்னணியைப் பகிர்ந்து கொண்டார்..

தொடர்ந்து பேசிய அவர், "இந்தப் பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன்.. ஆரம்பத்தில் சற்று தயக்கமாக இருந்தாலும், இப்போது வேலை மிகவும் எளிதாகி விட்டது.. ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன்.. இதுவரை பஸ்ஸில் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.. மகிழ்ச்சியோடு பணியாற்றி வருகிறேன்.. எந்தத் துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்..

அரசு பேருந்து நடத்துனர்

ஆண் கண்டக்டர்கள் மட்டுமே இருந்த பாதையில், துணிச்சலாக கோகிலா பயணச்சீட்டுகளை வழங்கி வருவது, மற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக அமைந்துள்ளது.. பயணிகளின் கூட்ட நெரிசலையும், பேருந்தின் அலைச்சலையும் பொருட்படுத்தாமல், புன்னகையுடன் தனது கடமையைச் செய்து வருகிறார் கோகிலா..

இன்றைய சூழலில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவது உண்மையிலேயே சூப்பர்.. குடும்பச் சூழலைச் சமாளித்து, பொதுமக்களுக்குச் சேவை செய்யும் இத்தகைய பெண்களின் தன்னம்பிக்கை போற்றத்தக்கது.. சூப்பர்ல...!!

Look who's in the Tiruppur TNSTC Bus! Breaking stereotypes, Kokila becomes Tiruppur's first female conductor and swiftly issues tickets

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+