"சீரழிச்சிட்டான்.. நம்பி ஏமாந்துட்டேன்.. ஏற்கனவே 4 பேர்".. கலெக்டர் ஆபீசில் கதறி அழுத பரிதாப பெண்

4 திருமணம் செய்த நபர் மீது முதல் மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தன்னுடைய கணவர் 4 திருமணம் செய்து கொண்டதால், மற்ற பெண்களையும் அவரிடமிருந்து காப்பாற்றுமாறு, மனைவி போலீசில் புகார் தந்துள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா.. 28 வயதாகிறது.. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்... இவருக்கும் சிங்காரம் என்பவருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடந்துள்ளது.. இவர்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

திருப்பூரில் 2 பேருமே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்... இந்நிலையில் சந்தியா கர்ப்பமாகவும், அவரை சொந்த ஊரான தருமபுரிக்கு அனுப்பி வைத்துவிட்டார் சிங்காரம்.

சிங்காரம்

சிங்காரம்

ஆனால், அதற்கு பிறகு, தருமபுரிக்கு சிங்காரம் போகவேயில்லை.. மனைவியையும் சென்று சந்திக்கவில்லை. தன்னுடைய அம்மா வீட்டுக்கும் சிங்காரம் செல்லவில்லை.. இதுகுறித்து விசாரித்தபோதுதான், சிங்காரம் வேறு ஒரு கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு, இன்னொரு பெண்ணையும் 2வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால், அந்த பெண் இறந்துவிட்டார்..

பின்னலாடை

பின்னலாடை

எனவே, பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இன்னொரு பெண்ணை 3வது திருமணம் செய்துள்ளார்... 3வது மனைவியுடன் குடும்பம் நடத்தி கொண்டே 4வதாக மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.. 3வது மனைவி கோவையை சேர்ந்தவர்.. 4வது மனைவி மதுரையை சேர்ந்தவர்.. இவர்களுக்கு தனித்தனியாக ஒரு வீட்டையும் வாடகைக்கு பிடித்து குடி வைத்துள்ளார்.

தருமபுரி

தருமபுரி

தன்னுடைய கணவன் 2வது திருமணம் செய்தது மட்டும்தான் முதல் மனைவி சந்தியாவுக்கு தெரியும்.. எனினும், பல நாட்களாகவே சொந்த ஊருக்கு வராமல் இருப்பதால், சந்தேகம் அடைந்த சந்தியா தருமபுரியில் இருந்து, திருப்பூரில் தான் குடியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், அந்த வீட்டில் சிங்காரம் இல்லை.. கோவையை சேர்ந்த பெண்ணுடன் அனுப்பர்பாளையம் பகுதியில் குடும்பம் நடத்தி வந்ததை அறிந்து அங்கு நேரில் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 அழகு மனைவி

அழகு மனைவி

இதை பற்றி கணவரிடம் கேட்டுள்ளார்.. அதற்குசிங்காரம், நான் பெண்களின் அழகை ஆராதிக்க பிறந்தவன் என்று கூலாக சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்லாமல், 3வது, 4வது மனைவிகள் சேர்ந்து கொண்டு சந்தியாவை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பரிதவித்துபோன சந்தியா, வேறு வழியில்லாமல் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் தந்தார்.. கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்... மனு அளித்த பிறகு சந்தியா செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

 நடவடிக்கை

நடவடிக்கை

"2 குழந்தைகளை பெற்ற பிறகு என்னிடம் அழகு இல்லை என்று சொல்லிவிட்டார்.. அதனால் என்னுடன் வாழவும் மறுத்துவிட்டார்.. இதை பற்றி கேட்டதற்கு 2 குழந்தைகளுடன் சேர்ந்து நீயே தற்கொலை செய்துக்கோ.. இல்லாவிட்டால் நான் கொலை செய்தால் 6 மாதம் ஜெயிலில் இருப்பேன்.. அப்பறம் வெளியே வந்து மறுபடியும் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துக்குவேன் என்று மிரட்டினார்.. என் வாழ்க்கை சீரழிந்தது போல, வேறு பெண்களின் வாழ்க்கையையும் சீரழித்து விடுவார்.. அதனால்தான் போலீசுக்கு வந்தேன்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+