எல்லாமே பொய்.. பாஜக முருகானந்தத்தை கொல்ல சதி என பரவிய மெசேஜ்.. வாக்குமூலத்தில் ட்விஸ்ட்
திருப்பூர்: பாஜக நிர்வாக ஏ.பி முருகானந்தமை கொலை செய்ய வங்கதேச ஆசாமிகள் சதி செய்திருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் காவல்துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர் ஏ.பி. முருகானந்தம். இவர் பாஜக மாநில பொதுச்செயலாளராக உள்ளார். சமீபத்தில் முருகானந்தம் குறித்து சமூகவலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது. அதில், முருகானந்தம் பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, மேற்குவங்கம் மற்றும் வட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்வதற்கான குழுவில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்.

ஆயுதம் ஏந்தி போராடும் மாவோயிஸ்டுகளை சரணடையச் செய்வதுடன், முக்கியமான மாவோயிஸ்ட் தலைவர்களை பாஜகவில் இணைக்கும் வேலையை கனகச்சிதமாக செய்து கொண்டிருப்பவர். தற்பொழுது தடை செய்யப்பட்டுள்ள "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா" என்கிற தீவிரவாத அமைப்பை கடுமையாக எதிர்த்து பல வகைகளில் போராட்டம் நடத்தி தடை செய்வதில் பெரும்பங்காற்றியவர். திருப்பூரில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டவர்.
இந்தியா முழுவதும் இப்படி பல தீவிரவாத இயக்கங்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு செய்து கொண்டிருக்கக் கூடிய இவரை பழி தீர்க்க சதித்திட்டம் தீட்டி அதற்கான பல வேலைகளை பல்வேறு தீவிரவாத குழுக்கள் இணைந்து செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழக காவல்துறை உரிய நேரத்தில் ஒரு பெரிய அசம்பாவிதத்தை தடுத்திருக்கிறார்கள்.
இதில் மத்திய உளவுத்துறையும் தங்களுடைய பங்கிற்கு பல தகவல்கள் கொடுத்ததன் அடிப்படையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் போல இன்னொரு பெரிய அசம்பாவிதம் தற்பொழுது தடுக்கப்பட்டு இருக்கிறது. எது எப்படியோ தமிழ்நாடு கொலை நகரமாக மாறிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. என்று குறிப்பிடப்படிருந்தது.
இதுகுறித்து சில ஊடகங்களிலும் செய்தி வெளியாகிருந்தது. பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, முருகானந்தத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினர். இந்நிலையில் திருப்பூர் காவல்துறையினர் இதுகுறித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில், திருப்பூர் மாநகரில் கடந்த 24.09.2024 ஆம் தேதி திருப்பூர் தெற்கு காவல் நிலலய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு பங்களாததஷ் நாட்டினரும், அதேபோல 25.09.2024 ஆம் தேதி அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பங்களாதேஷ் நாட்டினரும் மற்றும் 29.09.2024 ஆம் தேதி மீண்டும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று பங்களாதேஷ் நாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும், முறையான அனுமதியில்லாமல், இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தனர். இந்த குற்றத்துக்காக தற்போதுவரை 13
நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட 13 பங்களாதேஷ் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், நாங்கள் திருப்பூர் மாநகர பகுதிக்குள் மட்டுமே வந்துள்ளதாக வாக்குமூலம் அளித்தனர்.
கடந்த 09.10.2024 அன்று நாளிதழிலும் மற்றும் சமூக வலைதளங்களிலும் பிரசுரிக்கப்பட்ட “பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் முருகானந்தத்தை கொல்ல நடந்த சதி அம்பலம். கைதான வங்கதேச ஆசாமிகள் வாக்குமூலத்தால் பரபரப்பு என்ற செய்தி உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என்று கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பு குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வழக்கம் பாஜக நிர்வாகிகளே விளம்பரத்துக்காக பொய் செய்தியை பரப்பியுள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என விமர்சித்து வருகின்றனர்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications