நாதக வேட்பாளர் கார்த்திகாவை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.. விஜய் ரோடு ஷோவின்போது பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: முதலமைச்சர் விஜய் ரோடு ஷோவின் போது தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளார். நாதக வேட்பாளர் கார்த்திகா பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்ததால் போலீசாருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் நாளை மறுநாள் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

NTK Dharapuram Candidate Karthika Forcibly Arrested During Vijay s Roadshow

இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் சத்யபாமாவை ஆதரித்து இன்று அத்தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார் தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய். தாராபுரம் - கரூர் சாலை வீராச்சிமங்கலம் பிரிவு பகுதி வழியாக நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவும் பயணித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதேசமயம், அந்தப் பகுதியில் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யின் ரோடு ஷோவும் நடைபெற்றது. இதற்காக தவெகவினர் குவிந்திருந்தனர். அப்போது நாதக வேட்பாளர் கார்த்திகாவும் அங்கு வந்த நிலையில், சாலை முழுக்க குவிந்திருந்த தவெக தொண்டர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நாதகவினரால் நகரமுடியாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மாறிமாறி தங்கள் கட்சியின் பெயரைச் சொல்லியும், கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்ற நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா, தன் கட்சி கொடியை எடுத்து சுற்றினார்.

அப்போது, தவெகவினர் தொடர்ச்சியாக "TVK.. TVK" என முழக்கமிட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து, நாதக வேட்பாளர் கார்த்திகா மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோரின் வாகனங்களை அங்கிருந்து செல்லும்படியாக வழி ஏற்படுத்தினர்.

இருந்தபோதிலும், நாதகவினர் தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து கொளிஞ்சிவாடி பகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உட்பட அக்கட்சியினர் 200 பேரை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

"நாங்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகிறோம். விஜய் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே இங்கு எங்களை செல்ல விடாமல் தடுக்கின்றனர். இங்கு விஜய் மட்டும் அரசியல் கட்சி நடத்தவில்லை. அவர் பரப்புரை வருகிறார் என்பதற்காக மற்ற எல்லோரும் அவரவர் வேலையை விட வேண்டுமா?" என நாதக வேட்பாளர் கார்த்திகா கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+