ஓட்டலில் ஓசி சாப்பாடு.. தாங்காமல் குமுறிய உரிமையாளர்.. பல்லடம் காவலருக்கு மறக்க முடியாத பரிசு
திருப்பூர் : திருப்பூரை அடுத்த பல்லடம் காரணம்பேட்டையில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நியில் பல்லடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் ஒருவர் அடிக்கடி வந்து மாமூல் கேட்டு மிரட்டியதாகவும், தினமும் ஓட்டலுக்கு வந்து தனது நண்பர்களுடன் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்று விடுவதாகவும் ஓட்டல் உரிமையாளர் கூறியிருந்தார்
மேலும் அந்த ஓட்டல் உரிமையாளர் தனது பாட்டி இறந்து ஊருக்கு சென்ற நிலையில் தன்னிடம் அந்த போலீஸ்காரர் பணம் கேட்டு மன உளைச்சல் செய்வதாகவும், நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அந்த போலீஸ்காரர் தான் காரணம் என்றும், அந்த போலீஸ்காரருக்கு பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தையும் ஓட்டல் உரிமையாளர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

பல்லடம் பகுதியில் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த ஆடியோ திருப்பூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. ஒருகட்டத்தில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கவனத்திற்கும் போனது. இதையடுத்து எஸ்பி சாமிநாதன் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் இந்த புகார் தொடர்பாக விசாரித்தனர்.
ஓட்டல் உரிமையாளர் குற்றம்சாட்டி வெளியிட்ட ஆடியோவில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரரான சுபின் பிரபு என்பதும், அவர் முதல்நிலை காவலர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதனுக்க அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த அறிக்கையை பார்த்த திருப்பூர் எஸ்பி சாமிநாதன், போலீஸ்காரர் சுபின் பிரபு மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்த காரணத்தால் பணியிடைநீக்கம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டார். தொடர்ந்து சுபின் பிரபுவிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஓட்டல் உரிமையாளரை மாமூல் கேட்டு மிரட்டிய புகாரில் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதி காலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டல் உரிமையாளரின் ஆடியோ சமூக ஊடங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications