திருமாவளவனை கைது செய்ய வேண்டுமாம்.. பாஜகவை தொடர்ந்து கோதாவில் பனங்காட்டு படை.. போலீசில் புகார்
திருப்பூர்: பெண்களை இழிவாக பேசியதாக கூறி, லோக்சபா எம்பி, தொல்.திருமாவளவனை கைது செய்யக்கோரியும், பெரியார் யூடியூப்சேனலை தடை செய்யக் கோரியும் பனங்காட்டு படை கட்சி சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் பனங்காட்டு படை கட்சி சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பெண்களை இழிவாக பேசியும் அனைத்து பெண்களும் விலைமாதர்தான் என்று கூறிய லோக்சபா உறுப்பினர் திருமாவளவனை கைது செய்து அவர் எம்பி பதவியை பறிக்க வேண்டும்.
பெண்களை கொச்சைப்படுத்தும் லோக்சபா உறுப்பினர் பெண்களை இழிவுபடுத்திப் பேசியது மிகவும் வருந்தத்தக்க செயல் ஆகும். இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பியதால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் நகர செயலாளர் ரமேஷ் பனங்காட்டு படை கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கடந்த சில நாட்களாக கூறி வருகிறது. குஷ்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்று கைது செய்யப்பட்டார். இப்போது, திருமாவளவனுக்கு எதிராக பனங்காட்டு படை கட்சியும் கோதாவில் குதித்துள்ளது.












Click it and Unblock the Notifications