திருப்பூர்: தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். திருப்பூரில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.
ஆந்திராவில் இருந்து திருப்பூர் வரும் பிரதமர் அதன்படி இன்று ஆந்திரா மற்றும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார். அதனபின் சென்னையில் டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷநின் துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார் .
திருப்பூர் பெருமாநல்லூரில் பெரிய பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மற்ற வருகை போலவே இதுவும் பெரிய புயலை தமிழகத்தில் கிளப்பி இருக்கிறது. முக்கியமாக மீண்டும் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்ட் ஆக தொடங்கி உள்ளது.
Feb 10, 2019, 4:31 pm IST
சமூக நீதிதான் பாஜகவின் குறிக்கோள் - மோடி
சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரே கட்சி பாஜகதான் - மோடி
எஸ்சி, எஸ்டி மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள்தான் சட்டம் கொண்டு வந்தோம் - மோடி
நாடு முன்னேறட்டும், மக்கள் முன்னேறட்டும் - மோடி
''வணக்கம்'' என்று தமிழில் கூறி பேச்சை முடித்தார் பிரதமர் மோடி
திருவள்ளுவரின் குறளை கூறி பேச்சை முடித்தார் பிரதமர் மோடி
''வெள்ளத்தனைய மலர்நீட்டம்'' குறளை ஆங்கிலத்தில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி
Feb 10, 2019, 4:20 pm IST
தேர்தல் வந்தால் எதிர்க்கட்சியினர் தோல்வி அடைந்துவிடுவார்கள் - மோடி
தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் கடன் தள்ளுபடி பற்றி பேசுகிறது
இதன்முலம் விவசாயிகள் உண்மையில் பலன் பெற மாட்டார்கள் - மோடி
ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு பல திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறோம் - மோடி
Feb 10, 2019, 4:18 pm IST
மோடி ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள் - மோடி
ஆனால் அவர்கள்தான் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள்
அதனால்தான் அவர்கள் ஒன்றாக பெரிய கூட்டணி வைத்து உள்ளனர் - மோடி
அவர்களுக்கு கொள்கை எதுவும் கிடையாது
மோடியை தோற்க அடிக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை - மோடி
Feb 10, 2019, 4:16 pm IST
காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும் - மோடி
மோடியை வசைபாடுவதே அவர்களின் அரசியல்- மோடி
காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும் - மோடி
நீங்கள் டெல்லியில் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளீர்கள் - மோடி
எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை - மோடி
இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பினார்
முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது - மோடி
தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது - மோடி
Feb 10, 2019, 4:13 pm IST
மக்கள் காங்கிரஸ் கட்சியினரை புறக்கணித்தார்கள் - மோடி
காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள் - மோடி
காங்கிரஸ் தன்னை ஆளப்பிறந்த கட்சியாக நினைத்துக் கொண்டு இருந்தது - மோடி
தற்போது காங்கிரஸ் ஆளும் காலம் முடிந்துவிட்டது - மோடி
Feb 10, 2019, 4:12 pm IST
நம் நாட்டின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது - மோடி
இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள் - மோடி
அதனால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது - மோடி
பல நாள் கோரிக்கையான வருமான வரிவிலக்கு கோரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது - மோடி
Feb 10, 2019, 4:08 pm IST
இந்தியாவின் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆயுஷ்மான் திட்டம்தான் - மோடி
11 லட்சமும் பேர் ஆயுஷ்மான் திட்டம் மூலம் பயன்பெற்று இருக்கிறார்கள்- மோடி
2022க்கு முன் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டித்தரப்படும் - மோடி
வீடு என்பது வேறு சுவர் மட்டுமல்ல : அது மரியாதை- மோடி
Feb 10, 2019, 4:06 pm IST
பாஜக அரசு ஒவ்வொரு இந்தியருக்குமான அரசாங்கம் - மோடி
மக்களின் எதிர்காலத்தை நாங்கள் உறுதிப்படுத்துவோம் - மோடி
இரண்டு மடங்கு வேகத்தில் நாங்கள் சாலைகளை அமைத்து வருகிறோம் - மோடி
சாகர் மாலா திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் - மோடி
இந்தியா மிக வேகமாக வளரும் நாடாக மாறி இருக்கிறது - மோடி
ஆயுஷ்மான் திட்டம் மூலம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்றுள்ளனர் - மோடி
Feb 10, 2019, 4:05 pm IST
பாதுகாப்புத்துறை தளவாட பணிகளுக்கு பாஜக முக்கியத்துவம் அளிக்கிறது - மோடி
தமிழகத்திலும் ஒரு பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்பட உள்ளது - மோடி
Feb 10, 2019, 4:02 pm IST
மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - மோடி
பல்வேறு முன்னேற்ற திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து இருக்கிறோம் - மோடி
குமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் ஊழல் செய்துள்ளது - மோடி
பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது
ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த விதமான பலனும் ஏற்படவில்லை - மோடி
காங்கிரஸ் நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலை கொண்டது இல்லை
கடல் தொடங்கி ஆகாயம் வரை அனைத்திலும் ஊழல் செய்துள்ளனர் - மோடி
புரோக்கர் ஆட்சியை காங்கிரஸ் நடத்திக் கொண்டு இருந்தது
ஊழல் செய்து புரோக்கர்கள் எல்லோரும் காங்கிரசுக்கு நெருக்கமானவர்கள் - மோடி
Wonderful to be in Tiruppur, Tamil Nadu. Watch my speech at the massive rally. https://t.co/XO4Bf0fQG4
திருச்சியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - மோடி
சென்னையிலும் விமான நிலைய விரிவாக்க பணிகள் இன்று துவங்கி உள்ளது - மோடி
சென்னையில் புதிய மெட்ரோ சேவைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது - மோடி
Feb 10, 2019, 3:56 pm IST
தீரன் சின்னமலையும், திருப்பூர் குமரனும் பிறந்த ஊர் இது - மோடி
வரலாற்றில் சுதந்திர தாகம் எப்போதும் உள்ள ஊர் திருப்பூர் - மோடி
Feb 10, 2019, 3:55 pm IST
திருப்பூர் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
வணக்கம் என்று கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்
நமோ என்ற செய்தியை தாங்கி வரும் டி-சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டதுதான் - மோடி
Feb 10, 2019, 3:52 pm IST
திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியின் பேச்சை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்க்கிறார்
கடுமையாக உழைக்கும் மக்களை கொண்டது திருப்பூர் - பிரதமர் மோடி
தொழில்முனைவோர் நிறைந்த மண்ணை கொண்டது இந்த திருப்பூர் - மோடி
Feb 10, 2019, 3:34 pm IST
திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி
மருத்துவமனை மூலம் 1.22 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்
100 படுக்கை வசதிகளை கொண்டது இந்த மருத்துவமனை
Feb 10, 2019, 3:31 pm IST
வீடியோ கான்பரன்சிங் மூலம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
Feb 10, 2019, 3:31 pm IST
பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கி வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கொளுத்தும் வெயிலில் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்காக காத்திருப்பு
Feb 10, 2019, 3:28 pm IST
திருப்பூர் வந்தார் பிரதமர் மோடி
விழா மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வணக்கம் கூறி வரவேற்றார்
மத்திய அமைச்சர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் மேடையில் உள்ளனர்
Feb 10, 2019, 3:06 pm IST
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் செல்கிறார்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்,
டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் தம்பிதுரை, வேலுமணி ஆகியோர் மோடியை வரவேற்றனர்
Tamil Nadu: Prime Minister Narendra Modi arrives in Tiruppur. He will launch several development projects here and address a public rally shortly. pic.twitter.com/0yq4DbMkCb
பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்: திருப்பூரில் வைகோ கைது
வைகோ உட்பட மதிமுகவினர் பலர் கைது
3:06 PM, 10 Feb
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் செல்கிறார்
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்,
டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் தம்பிதுரை, வேலுமணி ஆகியோர் மோடியை வரவேற்றனர்
Tamil Nadu: Prime Minister Narendra Modi arrives in Tiruppur. He will launch several development projects here and address a public rally shortly. pic.twitter.com/0yq4DbMkCb