எல்லாம் பொய்.. நாங்க இருக்கோம்.. திருப்பூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்த போலீசார்!
தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் : திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றும் பனியன் நிறுவனங்களில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருப்பூர் அனுப்பர்பாளையம், செவந்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அவ்வாறு வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டி, விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள், தாக்கப்படுவதாக அவதூறான தகவல்கள் கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாலும் திருப்பூரில் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. வீடியோக்கள் பரவுவது போன்ற சூழல் எதுவும் தமிழ்நாட்டில் இல்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.

எந்தவித அச்சுறுத்தலும் இல்லை
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.

வதந்தி பரப்பினால் நடவடிக்கை
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வட மாநில தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏடிஎஸ்பி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இவர்கள் வட மாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள பின்லாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உதவி மையம்
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்காக பல்வேறு மொழி பேசக்கூடிய தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு
இந்நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகேயுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றும் பனியன் நிறுவனத்துக்கு நேற்று சென்ற மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்களில் உள்ள சம்பவங்கள், திருப்பூரில் நடைபெற்றவை இல்லை. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications