ரிதன்யா விருப்பத்தை மீறி அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகம்.. இயற்கைக்கு மாறாக இழிவான செயல்! தந்தை புகார்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த, கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, வழக்கறிஞர் மற்றும் அவரது உறவினர் கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்திற்கு புகார் கொடுத்து உள்ளனர். அதில், வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும், செய்யூர் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு பிரிவுகளை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த இளம் பெண் ரிதன்யா என்பவருக்கும் கவின் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் பதினோராம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரிதன்யாவின் பெற்றோர் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
திருமணமாகி இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்த நிலையில் மூன்றாவது வாரத்தில் இருந்து ரிதன்யாவிடம் கூடுதலாக 200 சவரன் தங்க நகைகளை பெற்றோரிடம் வாங்கி வர வேண்டும் என அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இருபது நாட்களுக்குப் பிறகு அவர்களது வீட்டுக்குச் சென்ற கணவர் கவின் ரிதன்யாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும், செய்யூர் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு பிரிவுகளை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரியுள்ளார் ரிதன்யாவின் தந்தை. அதில்," கணவர் கவின் குமார் பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவி ஆகியோரால் இடைவிடாத துன்புறுத்தல், பாலியல் கொடுமை, மனம் மற்றும் உடல் ரீதியாக சித்தரவதை செய்து உள்ளனர்.
200 பவுன் தங்கத்தை கொண்டு வருமாறு வரதட்சணை கேட்டு இழிவுபடுத்தி, அவமானப்படுத்தி உடல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். மகளின் விருப்பத்திற்கு மாறாக அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, இயற்கைக்கு மாறாக இழிவான செயல்களில் ஈடுபட்டு வற்புறுத்தியதாக வலி மற்றும் உணர்ச்சி வேதனையில் மகள் ஆழ்ந்ததாக தாக்குதல் நடத்தி பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் கூறி உள்ளனர்.
குற்றவாளிகள் உள்ளூர் அரசியல் செல்வாக்கு உடன் இருப்பதால் தனி விசாரணை அதிகாரியிடம் வழக்கை மாற்றவும், பிரேத பரிசோதனை அறிக்கை விரைவுப்படுத்தி அனைத்து தடயவியல் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றி வெளிப்படையாக பகுப்பாய்வு செய்யப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும், தொலைபேசி உள்ளிட்டவற்றை கைப்பற்றி வெளிப்படையாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். விசாரணை திசை திருப்புவதற்கு முன்பு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
காலதாமதத்தால் சாட்சிகள் மிரட்டுதல் மற்றும் நீதி மறுப்பு வழி வகுக்கும் எனவே பாரபட்சம் இன்று விசாரணை மற்றும் சரியான விசாரணை உறுதி செய்ய வேண்டும் என புகாரில் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications