22 ஆண்டுகளுக்கு பிறகு சிவன்மலை ஆண்டவர் கோயிலுக்கு புதிய சாலை பணிகள்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்து சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் விநாயகர் முருகனை வழிபடும் தலம் என்பதால் இந்த கோயில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டியும் உள்ளது. வேறு எந்த கோயிலிலும் இது போன்ற ஒரு விஷயம் இல்லை. முருகனே உண்மையான பக்தர்களின் கனவில் வந்து ஒரு குறிப்பிட்ட பொருளை சுட்டி காட்டுவார். அந்த பக்தர் மறுநாள் கோயில் நிர்வாகத்தை அணுக வேண்டும்.

கனவில்
அவர்களிடம் தன் கனவில் வந்த விஷயத்தையும் அந்த பொருளையும் குறிப்பிட வேண்டும். சும்மா யார் வந்து சொன்னாலும் வைத்துவிட மாட்டார்கள். அதை மூலவர் முன்பு பூப்போட்டு கேட்டு உத்தரவு பெற்ற பிறகு அந்த பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளானது எப்போது எடுக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

கனவில் முருகன்
அடுத்த பக்தரின் கனவில் முருகன் வந்து வேறு பொருட்களை வைக்க சொல்லும் வரை ஏற்கெனவே இருந்த பொருட்கள் அந்த பெட்டியில் அப்படியே இருக்கும். அவை தொடர்ந்த பூஜிக்கப்படும். இவ்வாறு அந்த பெட்டியில் வைக்கப்படும் பொருள், இந்த சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பாசிட்டிவாகவும் இருக்கும், நெகட்டிவாகவும் இருக்கும்.

காரணமூர்த்தி
இதனால் இந்த மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயரும் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் சிவன்மலையாண்டவர் உத்தரவு பெட்டியில் இளநீர் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மழை பெய்து தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தென்னை பொருட்களின் விலை சரிந்துள்ளது. தற்போது உத்தரவு பெட்டியில் இளநீரை வைத்துள்ளதால் தென்பொருட்களின் விலை உயர்வையோ அல்லது கடும் சரிவையோ சந்திக்கலாம்.

பூஜிக்கப்பட்ட பொருள்
துப்பாக்கி தோட்ட வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் மீண்டது. அதில் இந்தியா வென்றது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி பேரலை வந்தது. அது போல் கொரோனா தொற்றின் போது கூட சில பொருட்களை வைத்து பூஜிக்க உத்தரவு கிடைத்தது. இந்த கோயில் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

பக்தர்கள் மலை
கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் மலையில் உள்ள தார்சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலை பழுதடைந்துள்ளதால் புதுப்பிக்க வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். கடந்த தேர்தலின் போது அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இந்த சாலை புதுப்பிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மலைக்கோயில்
அதன்படி கோயில் அடிவாரத்திலிருந்து மலைக்கோயில் வரை 2 கி.மீ. தூரத்திற்கு இந்த மலைச்சாலையை புதுப்பிக்கும் பணியை சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதற்கான பூமிபூஜை சிவன்மலை முருகன் கோயில் அடிவாரத்தில் நடந்தது. கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மலைப்பாதை புதுப்பிக்கப்படுவதால் பக்தர்களும் அப்பகுதி மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications