அசிங்க அசிங்கமா பேசுறாங்க.. செல்போன் பாத்து ஒரு மாசமாச்சு! விஜய் முன் கண்கலங்கிப் பேசிய சத்யபாமா!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய் முன்னிலையில் மேடையில் பேசிய சத்யபாமா கண்கலங்கி பேசினார். தன்னை ஒரு பெண் என்று கூட பாராமல் அசிங்க அசிங்கமாக பேசுவதாகவும், இதனால் தான் செல்போன் கூட பார்ப்பதில்லை என கண்கலங்கினார். மேலும் தான் தவறு செய்திருந்தால் இந்த தேர்தலில் நின்று இருக்க மாட்டேன் என அழுதுபடி பேசிய அவரை விஜய் தேற்றினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தாராபுரம் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

Sathyabama

இதனையடுத்து தற்போது தாராபுரம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ சத்தியபாமா தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்காக செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

துரோகி துரோகி" என்ற முழக்கங்களோடு அதிமுகவினர் அவரை விரட்டி அடிப்பதாக தமிழக வெற்றி கழகத்தினர் புகார் சொல்கின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு அலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்துக்கு பிரச்சாரம் செய்ய வந்தார்.

கோவையில் இருந்து சாலை வழியாக தாராபுரம் வந்து அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து தாராபுரம் - உடுமலை சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் வேட்பாளர் சத்தியபாமாவை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் ஆனந்த்.

பின்னர் பேசிய சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுதார். அப்போது பேசிய அவர்," அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி விரோதமாக செயல்படுவதாகவும், அவர் ஆட்சியமைக்க திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதால் தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தேன். ஆனால் செல்லும் இடங்களில் எல்லாம் என்னை அசிங்க அசிங்கமாக பேசுகிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஒரு பெண் என்றும் பாராமல் கேவலமாக விமர்சனம் செய்கிறார்கள். இதனால் நான் செல்போனைக் கூட பார்ப்பதில்லை. நான் தவறு செய்திருந்தால் மீண்டும் மக்கள் முன் நின்று வாக்கு சேகரிக்க வந்திருக்க மாட்டேன். நான் தவறு செய்திருந்தால் விஜய் என்னை போட்டியிட அனுமதித்திருக்க மாட்டார்" என கண்கலங்க பேசினார்.

மேலும்," நான் எந்த தவறும் செய்யவில்லை தேர்தலுக்குப் பிறகு கூட தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என 33 எம்எல்ஏக்கள் பேசினோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி எங்கள் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தார். ஜெயலலிதா கண்ட கனவை சிறைப்பது போல எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால்தான். நான் தமிழக வெற்றிக்கழகத்திற்கு வந்தேன். ஆனால் என்னை ஒரு பெண் என்று கூட பார்க்காமல் பேசுகிறார்கள்" என கண்கலங்கி பேசினார். அப்போது அவரை ஆறுதல் படுத்தினார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+