கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்.. திருப்பூர் தாராபுரத்திலும் ராமநாதபுரம் நிலைமை.. வீடியோவை பாருங்க
திருப்பூர்: "கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்" என்ற பதிவில் நீர்நிலை ஆர்வலரான நிர்மல் ராகவன் வெளியிட்ட பதிவில் நான் இதுவரை நினைத்தது தவறு என்பதை இன்று இங்கு வந்தபோது தான் புரிந்தது. தாராபுரம் அருகேயும் இவ்வளவு கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் அளித்தது. இராமநாதபுரத்தில் காணும் நிலைமை, அப்படியே இதே மாதிரி காட்சிகளை இங்கும் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ( நகரம் மற்றும் பாதி மாவட்டம்), தூத்துக்குடி (பாதி மாவட்டம் மட்டும்), புதுக்கோட்டை (ஒரு பகுதி மாவட்டம்), வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் போன்ற மாவட்டங்கள் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான உள்ளன.

மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களில் தண்ணீர் பஞ்சம் என்பது கிடையாது. தண்ணீர் பஞ்சம் அதிகம் உள்ள மாவட்டம் என்றால், அது ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகியவை தான். இந்த மாவட்டங்களில் ஆறுகளில் தண்ணீர் இல்லை. மழையும் குறைவு என்பதால் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த மாவட்டங்களுக்கு அண்டை மாவட்ட ஆறுகள் மூலம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோக செய்யப்படுகிறது.
நீர்நிலை ஆர்வலரான நிர்மல் ராகவன் தமிழகத்தின் மாவட்டங்களில் நீர் நிலைகளை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். ஊர் ஊராக தேடி தேடி கண்டுபிடித்து தண்ணீர் பஞ்சத்தை போக்க குளம், ஏரிகளை தூர் வாரி சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு குளங்களை மேம்படுத்தி உள்ளார்.
நிர்மல் ராகவன் "கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்" பெயரில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "இத்தனை ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் இருக்கும் எல்லா இடங்களுக்கும் நான் சென்று பார்த்திருக்கிறேன். பல மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். தமிழ்நாட்டின் பல பகுதி மக்கள் சந்திக்கும் தண்ணீர் பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்.இந்தியாவின் பல மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் கூட இந்த பிரச்சனையை நேரில் கண்டிருக்கிறேன்.
அதே மாதிரி, இராமநாதபுரம் பகுதியில் தண்ணீர் பஞ்சம் பற்றி பேசும்போது, இந்த மாதிரி வண்டி இராமநாதபுரத்திலும் அதற்கும் அருகில் உள்ள சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில்தான் இருக்கும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நான் இதுவரை நினைத்தது தவறு என்பதை இன்று இங்கு வந்தபோது தான் புரிந்தது. தாராபுரம் அருகேயும் இவ்வளவு கடுமையான தண்ணீர் பஞ்சம் இருப்பது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் அளித்தது.
இராமநாதபுரத்தில் காணும் நிலைமை, அப்படியே இதே மாதிரி காட்சிகளை இங்கும் பார்த்தேன். இது எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது. கொங்கு பகுதியை நான் எப்போதும் செழித்து விளையும் விவசாயப் பகுதி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இங்கேயும் தண்ணீர் பிரச்சனை மிகக் கடுமையாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“கொங்கு நாட்டிலும் தண்ணீர் பஞ்சம்”
— Nimal Raghavan (@being_nimal) November 26, 2025
இத்தனை ஆண்டுகளாக தண்ணீர் பஞ்சம் இருக்கும் எல்லா இடங்களுக்கும் நான் சென்று பார்த்திருக்கிறேன்.
பல மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.
தமிழ்நாட்டின் பல பகுதி மக்கள் சந்திக்கும் தண்ணீர் பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும்,… pic.twitter.com/CigpHPurNs
இதற்கான காரணங்களையும் அறிந்துகொண்டேன். சரி செய்ய வேண்டிய பணிகளை அடுத்தடுத்து செய்து வருகிறோம். இதற்கு முன்பு நான் போட்ட பதிவில், இந்த வண்டி எங்கு எடுத்தது என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு அனைவரும் தவறாக இராமநாதபுரம் என்று பதில் சொல்லியதால், யாருக்கும் பரிசு இல்லை!" இவ்வாறு கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications