பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு தரும் 50000 ரூபாய்.. ஆதார் கார்டு, டீசி... என்னென்ன வேண்டும்?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற வேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்பு பத்திரத்துடன், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண்.35-ல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 1992 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இசேவை மையத்தில் விண்ணப்பதாரர்களால் விண்ணப்பிக்கப்படுகிறது.விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள். மாவட்ட சமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
1992 முதல் 2001 வரை தமிழ்நாடு போக்குவரத்து நிதி கழகத்தின் மூலம் நிதி வழங்கப்பட்ட நிதி, 2002 முதல் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.
பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/- வழங்கப்படுகிறது. 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/- வழங்கப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படுகறது.
அதேபோல் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது. இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.
அதேபோல் 01.08.2011 க்கு பின்பு முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/- வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படுகிறது. இந்த வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தை என்றால் தலா ரூ.25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். இந்த தொகை அந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற வேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்பு பத்திரத்துடன், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண்.35-ல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications