திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க வைத்த பாஜக.. குண்டு வைத்த குண்டடம் வாக்காளர்கள்..எதிர்பாராத ட்விஸ்ட்!

Google Oneindia Tamil News

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலுள்ள குண்டடம் 9வது வார்டில் திமுக 13 கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட்டு வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி முடிவுகளில் திமுக அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. 21 மாநகராட்சிகளிலும் திமுகவே முன்னிலையில் உள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான நகராட்சி பேரூராட்டிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தது. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தற்போது வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

தனித்து மலர்ந்த“தாமரை”..திமுக அதிமுகவுக்கு டஃப் கொடுத்து வின்னிங்.. ஸ்வீட் எடுத்து கொண்டாடும் பாஜக தனித்து மலர்ந்த“தாமரை”..திமுக அதிமுகவுக்கு டஃப் கொடுத்து வின்னிங்.. ஸ்வீட் எடுத்து கொண்டாடும் பாஜக

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ருத்திராவதி பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 8வது வார்டு சுயேட்சை வேட்பாளர் திருமதி வேலுமணி, 14வது வார்டு அதிமுக வேட்பாளர் சுமதி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் பல பகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள பகுதிகளிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

குண்டடம் ஊராட்சி ஒன்றியம்

குண்டடம் ஊராட்சி ஒன்றியம்

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்ட நிலையில் தமிழகம் போலவே திருப்பூரிலும் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி திமுக கைப்பற்றி நிலையில் உடுமலைப்பேட்டை பல்லடம் தாராபுரம் காங்கேயம் திருமுருகன்பூண்டி உள்ளிட்ட நகராட்சிகளில் திமுக கைப்பற்றியது.

அதிர்ச்சி கொடுத்த பாஜக

அதிர்ச்சி கொடுத்த பாஜக

இதேபோல 15 பேரூராட்சிகளில் திமுக 14 பேரூராட்சி களையும் அதிமுக ஒரு பேரூராட்சியையும் கைப்பற்றியுள்ளது. தேர்தலில் எதிர்பாராத விதமாக 13 கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒருவர் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. குண்டடம் 9வது வார்டில் 13 கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கிருத்திகா ருத்திரகுமார்

கிருத்திகா ருத்திரகுமார்

9வது வார்டு போட்டியிட்ட பாஜக பிரமுகரின் ருத்திரகுமார் என்பவரது மனைவியான கிருத்திகா ருத்திரகுமார் சுமார் 77 சதவீத வாக்குகள் அதாவது 211 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான பாலாமணி என்பவர் 22 சதவீதம் வாக்குகள் அதாவது 63 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதுதவிர கிருத்திகாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திமுக வேட்பாளர் வெறும் 30 வாக்குகள் மட்டுமே பெற்று உள்ளது கவனிக்கத்தக்கது

English summary
In Kundadam 9th ward in Tiruppur district, the DMK contested with a coalition of 13 parties and got only 30 votes, while the BJP candidate in this ward won with 211 votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X