விசிக ஆதரவு கொடுத்த அடுத்த நிமிடமே.. திருமாவளவனுக்கு போன் போட்ட விஜய்! நேரில் போவாரா?
சென்னை: பெரும்பான்மை இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக விசிக இன்று ஆதரவு கடிதத்தினை வழங்கியுள்ளது. இதனால் தவெக தலைவர் விஜய் திருமாவளவனை செல்போனில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்ததற்கு விஜய் நேரில் சென்று நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வென்ற தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் ஆர்லேகர் உறுதியாக உள்ளார். இதனால் ஆட்சி அமைக்க தேவைப்படும் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக கடுமையாக போராடியது.

சிபிஐ, சிபிஎம் ஆகிய 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவை அளித்துவிட்டன. ஆனால் விசிக நேற்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று காலை திருமாவளவன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விசிகவின் நிலைப்பாடு தொடர்ந்து தாமதம் ஆனது. திருமாவளவன் நேற்று இரவு ஸ்டாலினை சந்தித்தார்.
அதன்பிறகு பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் இன்றி தனியாக சென்னை நட்சத்திர விடுதிக்கு சென்றார். விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு விஜய்யும் வர இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இது எதுவுமே நடக்கவில்லை. திடீரென நட்சத்திர விடுதியில் வைத்து திருமாவளவனை தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சந்தித்தார்.
அப்போது தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜுனா பெற்றுக்கொண்டார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர விஜய் தயாராகி வருகிறார். இதற்கிடையே, திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய் அவருக்கு ஆதரவு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். நேற்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜய், ஆதரவு தெரிவித்ததற்கு நேரில் நன்றி கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார் விஜய். விசிக அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் விஜய்யும் அங்கு வரக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. எனினும் ஆளுநரை சந்தித்துவிட்டு வருவாரா அல்லது அதற்கு முன்பு வருவாரா என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மை இப்போது 120 ஆக அதிகரித்துள்ளது. உடனே விஜய்யும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறார். ஆளுநர் இன்று இரவு 7 மணிக்கு கேரளாவுக்கு செல்ல உள்ள நிலையில் விஜய் அதற்கு முன் சந்திக்க நேரம் அளிப்பாரா விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications