விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே அனைவரும் வருகிறார்கள்.. தாடி பாலாஜி பேட்டி
சென்னை: விஜய் நிச்சயம் ஆட்சி அமைத்து, பெரும்பான்மையை நிரூபிப்பார். திங்கட்கிழமைக்குள் மாற்றம் நடைபெறும். விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக பிரம்மாண்ட வெற்றி கிடைத்துள்ளது என்று நடிகர் தாடி பாலாஜி பேட்டி அளித்தார். பொன்னேரி அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் தாடி பாலாஜி இந்த கருத்தை தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இழுபறியாக நேற்று சூழல் இருந்தது. இன்று மாறிவிட்டது. எனினும் நேற்று நடிகர் தாடி பாலாஜி பொன்னேரி அருகே அமைந்துள்ள குமரஞ்சேரி, சிறுவாபுரி முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தாடி பாலாஜி பேசுகையில், "பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற விஜய் குழுவினருக்கு வாழ்த்துக்கள், புதுச்சேரியில் வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் வாழ்த்துக்கள் . விஜய்க்கு சோதனைக்கு மேல் சோதனை கொடுப்பதாகவும் அவை அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்று வருகிறார். விஜய்க்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதனால் தான் திருச்செந்தூருக்கு சென்று வந்துள்ளார். நிச்சயமாக முருகன் துணை இருப்பார்.
திரைத் துறையிலும் சரி அரசியலிலும் நீண்ட சோதனைகளை சந்தித்து விட்டார். பலருக்கு முகவரி கொடுத்துள்ளார். அவர்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் . அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் விஜய் நிறைவேற்ற வேண்டும் . இறைவன் தன்னம்பிக்கையையும் மன வலிமையையும் கொடுத்திட வேண்டும். எல்லாரும் சப்போர்ட் பண்றாங்க.. அனைவரும் ஆதரவளித்து வருகிறார்கள். சங்கடப்பட வேண்டாம். உற்ற நண்பனாக தாடி பாலாஜி துணை நிற்பேன் . பெரும்பான்மை நிரூபிப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது.
சட்டசபையில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை . பல சோதனைகளைக் கடந்து வந்து விட்டார். கட்சி துவங்க மாட்டார், கொடி அறிமுகம் செய்ய முடியாது, மாநாடு நடத்த முடியாது, போன்ற பலவற்றை விஜய் அண்ணா கடந்து வந்து விட்டார். எனவே நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பார் என தெரிவித்தார்.
மறைமுகமாக அவருக்கு நிறைய தடைகள் வந்து கொண்டிருந்தது. திங்கட்கிழமைக்குள் கட்டாயம் மாற்றம் நிகழும் . விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு என்று தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இது மக்கள் தீர்ப்பு. மாற்றம் நிகழும் . விஜய் வலுக்கட்டாயமாக யாரையும் இழுக்கவில்லை. யாரிடமும் சென்று விஜய் கோரிக்கை வைக்கவில்லை.. அனைவரும் விருப்பத்துடன் வந்துள்ளார்கள். விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக மட்டுமே அனைவரும் வருகிறார்கள்" இவ்வாறு கூறினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications