திருப்பூரை உலுக்கிய சத்தம்.. அதிர்வலைகளுடன் வெடி வெடித்தது போல் சத்தம் கேட்டதால் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வெடி வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
Recommended Video
அண்மையில் பெங்களூரு நகரில் வெடி வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதற்கு தேஜஸ் போன்ற சூப்பர் சோனிக் விமானம் பறந்ததால் வானில் பெரும் சப்தம் உருவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்போது பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரவியது பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10.30 மணி அளவில் அதிர்வலைகளுடன் பலத்த வெடி சத்தம் வானில் கேட்டது. இதேபோன்ற வெடி சத்தம் தாராபுரம், குண்டடம் , கொடுவாய், பல்லடம் உள்பட திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் கேட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சத்தத்திற்கு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்ட அதிநவீன தேஜஸ் ரக விமானம் காரணம் என்கிறார்கள். இந்த விமானம் புதன்கிழமை விமானப்படை பிரிவில் சேர்க்கப்பட்டது. இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். சுமார் 7 டன் எடை கொண்ட இந்த போர் விமானம், ஒலியின் வேகத்திற்கு இணையாக அதிவேகத்தில் செல்லக்கூடியதாகும்.
எனவே இந்த விமானத்தின் சோதனை ஓட்டத்தின் போது சோனிக் பூம் சப்தமும் அதிர்வலைகளும் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications