திருப்பூரில் பயங்கரம்.. அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து.. அலறி துடித்த பயணிகள்.. 20 பேர் படுகாயம்
திருப்பூர்: கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் அருகே அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சமீப நாட்களாகவே பயணிகள் பஸ்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தென்காசியில் தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை
இந்த நிலையில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஊட்டியில் இருந்து சேலம் நோக்கி ஒரு பேருந்தும், கோவையில் இருந்து சேலத்திற்கு ஒரு பேர்ந்தும், திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு பேருந்தும் என அடுத்தடுத்து 3 பேருந்துகள் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இதில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பள்ளம்கொண்டான்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றது.
அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதி விபத்து
அப்போது அந்த வாகனம் திடீரென பிரேக் பிடித்து நின்றுள்ளது. இதனால் அந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். இதில் பின்னால் அடுத்தடுத்து வந்த பேருந்துகள் முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இவ்வாறாக 3 பேருந்துகள் அடுத்தடுத்து மோதின. இதில் திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
15 பயணிகள் படுகாயம்
இதில் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயமடைந்து அலறி துடித்தனர். இதையடுத்து உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திருக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. ஊத்துக்குழி போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கோவை - சேலம் நெடுஞ்சாலையில் இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து விபத்துக்குள்ளான பஸ்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பஸ் டிரைவர்கள் பேருந்துகளை கவனமாக இயக்க வேண்டும் என்றும், அதி வேகத்தில் செல்லக்கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது விபத்துக்குள்ளான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications