மொத்தமாக முடங்கிய ஆதார் சென்டர்ஸ்.. திருப்பூரில் கார்டு திருத்தவும் முடியல! அரசு அதிகாரிகள் சொல்வது?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: சாப்ட்வேர் கோளாறு காரணமாக, கடந்த 4ம் தேதியிலிருந்தே தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன ஆதார் மையங்களில் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதில் மற்ற மாவட்டங்களை போலவே திருப்பூர் மாவட்டம் கடுமையாக அவதிக்கு உள்ளாகி உள்ளது.. அவசரத்துக்கு ஆதார் கார்டு திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாமல், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்வதென்ன ?

இன்று ஆதார் கார்டுகள் முக்கிய தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. வங்கி கணக்கு துவங்குவது முதல். ரேஷன் கார்டு பெறுவது, அரசு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் பெறுவது உள்பட அனைத்து பயன்பாடுகளுக்குமே, அடையாள ஆவணமாக ஆதார் கார்டு கேட்கப்படுகிறது.

tiruppur aadhaar centers aadhaar card

அந்தவகையில், இந்தியா முழுவதும் ஆதார் பதிவு மற்றும் ஆதார் எண் ஒதுக்குவது மற்றும் ஆதார் அட்டைகளை அச்சிடுவது உள்ளிட்ட பணிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை நேரடியாக மேற்கொள்ளாமல் பல்வேறு முகமைகள் மூலம் மேற்கொண்டு வருகிறது.

அரசு கேபிள் டிவி நிறுவனம்

ஒவ்வொரு ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகளை, சம்பந்தப்பட்ட பணியாளரின் கைரேகை வைத்த பின்னரே மேற்கொள்ள முடியும். ஒரு பணியாளர் ஒரு நாளில் ஒரு மையத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள முடியும்.

பொதுவாக, தனிநபர் கைரேகை, கண் கருவிழி ஆகிய பயோமெட்ரிக் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் வழங்கப்படுகின்றன.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரையில், எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம், தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆதார் கார்டு திருத்தம்

அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இயங்கும் இந்த இ-சேவை மையத்தில் தினமும் ஏராளமானோர் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி மாற்றங்கள் மற்றும் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே பொதுமக்களின் அவசியத்தை உணர்ந்து, அரசு கேபிள் டிவி நிறுவன கட்டுப்பாட்டில், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இ-சேவை மையங்கள் அவ்வப்போது முடங்கிவிடுவது பொதுமக்களுக்கு அதிருப்தியை தந்துவிடுகிறது..

ராமநாதபுரம் - பரமக்குடி

கடந்த 4 நாட்களுக்கு முன்புகூட ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இப்படியொரு சிக்கல் ஏற்பட்டது.. இதனால் திருவாடானையிலிருந்து நீண்ட தொலைவில் உள்ள எஸ்.பி.பட்டினம், தொண்டி, மங்களக்குடி, முள்ளிமுனை, காரங்காடு பகுதியிலிருந்து வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்..

பரமக்குடி தாலுகாவில் மட்டுமே ஆதார் சேவை இயங்கி வந்ததால், மற்ற தாலுகாக்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், அது சீரானவுடன் ஆதார் சேவை தொடரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஆதார் மையங்கள்

இந்நிலையில், சாப்ட்வேர் கோளாறு காரணமாக, கடந்த 4ம் தேதியிலிருந்தே தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவன ஆதார் மையங்களில் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டமும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், ஊத்துக்குளி, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில் தலா ஒன்று; உடுமலை தாலுகா அலுவலகத்தில், 2 என, மொத்தம் 10 ஆதார் மையங்களிலும், கிட்டத்தட்ட 500 பேருக்கு ஆதார் பதிவு, திருத்தங்கள் செய்யப்படுகிறது.

அரசு சேவை மையங்கள் முடக்கம்

ஆனால், தொடர்ந்து 5 நாட்களாக அரசு சேவை மையங்கள் செயல்படாததால், பொதுமக்கள், மிகவும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. புதிய ஆதார் பதிவு, ஆதாரில் செல்போன் எண், முகவரி மாற்றங்கள், பயோமெட்ரிக் அப்டேட், திருத்தங்கள் போன்றவற்றை செய்ய முடியவில்லை.. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

எனவே, திருப்பூர் கலெக்டர் ஆபீஸ், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதார் மையங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.. இதனால், அந்த மையங்களிலும் கூட்டம் வழிந்து நிறைந்து வழிகிறதாம்..

அதிகாரிகள் நம்பிக்கை

இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "ஆதார் பதிவுக்கான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சாப்ட்வேர், அப்டேட் செய்யப்பட்டு, புதிய வெர்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவேதான், ஆதார் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனைகளை தொழில்நுட்ப குழுவினர் விரைந்து சரிசெய்து வருகிறார்கள்.

சாப்ட்வேர் கோளாறு சரி செய்யப்பட்டதுமே, செல்போனில் அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆதார் பதிவு செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+