திருப்பூர் பஸ் ஸ்டாண்டை கலக்கிய ஜோடி.. யாரந்த பையன்? கடைசியில் பார்த்தால்? வியப்பூட்டிய "ஐபோன்கள்"
திருப்பூர்: திருப்பூர் போலீசார் 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது திருப்பூர் பஸ் ஸ்டாண்டில்?
திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனும், 15 வயது சிறுமியும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவந்துள்ளனர்.. இவர்கள் 2 பேருமே பக்கத்து பக்கத்து ஊரைச்சேர்ந்தவர்கள்.. எனவே, நாளுக்கு நாள் இவர்களது நட்பு , காதலாக மாறியது.

ஒருநாள் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்து, அதன்படியே சந்தித்து பேசியிருக்கிறார்கள்.. அப்போது சிறுமி, தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் உள்ளதாகவும், அனைத்து வசதிகளுடனும் கூடிய போன் வாங்கி தரும்படியும் காதலனிடம் கேட்டாராம்..
புதிய செல்போன்கள்: அதற்கு சிறுவன், "என்னிடம் இப்போது பணமில்லை.. நீ பணத்தை கொண்டுவந்து தந்தால், உனக்கு புதிய செல்போன் வாங்கி தருகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், சிறுவனும் பழைய செல்போன் பயன்படுத்தி வருவதை சிறுமி கவனித்திருக்கிறாள்.. அதனால், காதலனுக்கும் புது செல்போன் வாங்கி தர முடிவு செய்துள்ளார்.. அதுவும் 2 ஐபோன் வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தார்.
திருப்பூர்: இதற்காக வீட்டிலேயே பீரோவிலுள்ள தன்னுடைய அம்மாவின் நகைகளை திருடி, விற்று, அந்த பணத்தில் போன் வாங்கலாம் என்று முடிவு செய்து, பீரோவில் இருந்து 7 பவுன் நகையையும் சிறுமி திருடிவிட்டார்.. உடனே இதுகுறித்து சிறுவனுக்கு தகவல் தந்து திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு வரவழைத்தார். அங்கு காதலனிடம் திருடிய நகையை தந்து, அவைகளை விற்றுவர சொன்னார்..
அதன்படியே சிறுவனும் நகையை விற்று பணத்தை வாங்கி வரவும், ஆளுக்கொரு ஐபோன்களை வாங்கி கொண்டார்கள் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை வாங்கியிருக்கிறார்கள். மிச்சமிருந்த பணத்தில் திருப்பூரில் ஜாலியாக ஊர்சுற்றிவிட்டு, அவரவர் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்..
புகார்: இதனிடையே வீட்டில் நகையை காணாமல், மகளையும் காணாமல் சிறுமியின் அம்மா பதறிப்போனார்.. அந்தநேரம் பார்த்து புது ஐபோனுடன் சிறுமி வீட்டிற்குள் நுழையவும், சந்தேகப்பட்டு அவரிடம் கேட்டுள்ளார். அப்போதுதான், நகையை திருடி 2 செல்போன்கள் வாங்கியதை, தன்னுடைய அம்மாவிடம் சொன்னார்.. உடனே சிறுமியின் பெற்றோர் வடக்கு மகளிர் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுமிக்கு ஆசை வார்த்தைக்கூறி பணத்துடன் ஊர் சுற்றியதால் போலீசார் போக்சோ வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்திருக்கிறார்கள். சிறுவனிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications