திருப்பூர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன்.. மறைந்தும் வாழ போகிறார்.. நெகிழ வைத்த குடும்பத்தினர் முடிவு
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் 2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்ற குணசேகரன் இன்று காலை காலமானார். இவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனி உள்பட அதிமுக தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் குணசேகரன். 58 வயதான இவர் அதிமுகவின் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனையில் குணசேகரன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். கடந்த 2001 முதல் 2006 வரை திருப்பூர் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர். 2011 முதல் 16 வரை திருப்பூர் மாநகராட்சி துணை மேயராக பதவி வகித்தார்.

2016 முதல் 2021 வரை திருப்பூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகிக்கிறார். அவரது உடல் மதியம் 12 மணிக்கு திருப்பூர் ராக்கியபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அவரது மறைவை தொடர்ந்து அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.பி.வேலுமனி, முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம்.ஆனந்தன், தாமோதரன், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேபோல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, கரைப்புதூர் நடராஜன், என்.எஸ்.நடராஜன், எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சிக் குழு கொறடா கண்ணப்பன் உட்பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும், கட்சிக்கொடி போர்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவர் மறைந்த பிறகும் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications