Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமிறி எழும் திருப்பூர்.. அமெரிக்க வரியால் பாதிப்பில்லை! கைகொடுக்கும் UK.. ஏற்றுமதியாளர் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: அமெரிக்காவின் வரி விதிப்பால் நிறுவனங்கள் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன, இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும், மாநில அரசு மின்கட்டணத்தைக் குறைத்து அறிவித்தால் அமெரிக்கா வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் சக்திவேல் கூறியுள்ளார்.

திருப்பூர் 52வது நிட்பேர் எனும் பின்னலாடை கண்காட்சி 12ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்த செய்தியாளர் சந்திப்பு திருப்பூரில் நடைபெற்றது.

இதில் பேசிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் சக்திவேல், "தற்போதைய சூழலில் இந்தக் கண்காட்சி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. யூகே உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு நடக்கும் கண்காட்சி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tiruppur Textile Exports

திருப்பூர் ஏற்றுமதி

யுகே உடனான 1 பில்லியன் ஏற்றுமதி 2 பில்லியன் வரை உயர வாய்ப்பு உள்ளது. மேலும் ஐரோப்பாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க உதவும். கண்காட்சியில் 60 ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட 200 புதிய வர்த்தகர்கள் வர வாய்ப்புள்ளது.

அமெரிக்க வரி

5 வாரங்களுக்குள் அமெரிக்க வரி விதிப்புக்கு தீர்வு வரும். டிரம்ப் தற்போது இந்தியா வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மூலம் மீண்டும் இயல்பு நிலை திரும்பும். சுமூக தீர்வு எட்டப்படும். அமெரிக்க வரி விதிப்பால் நிறுவனங்கள் மூடப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறு. அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் மட்டும் லேசான பாதிப்பை சந்தித்துள்ளன. அவர்களுக்கும் விலை சலுகை மூலம் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

ஆடை தொழில்

எந்த ஒரு நபருக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை.‌ கடந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்த நிலையில் இந்த ஆண்டு வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் 15 சதவீதம் கூடுதல் ஏற்றுமதி நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு ஏற்றுமதிக்கு 15 சதவீதம் கூடுதல் மானியம் வழங்க வேண்டும், மாநில அரசு மின்கட்டணத்தை குறைத்து அறிவித்தால் இந்த நிலையில் பயனுள்ளதாக இருக்கும். ஜி.எஸ்.டி வரி குறைப்பு உள்நாட்டு வர்த்தகம் சிறக்கும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

வேலை இழப்பு

முன்னதாக, அமெரிக்காவின் வரிவிதிப்பால், அமெரிக்காவில் குளிர்காலத்தை குறிவைத்து ஆர்டர் எடுத்திருந்த ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் தற்போதைக்கு அந்த ஆர்டர்களை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர். டாலர் மதிப்பு அதிகரிப்பால் ஏற்கனவே பெற்ற ஆர்டர்களை ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே வரி விதிப்பு அமலுக்கு வந்திருக்கும் நிலையில் அமெரிக்காவில் 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஆடைகள் 130 முதல் 150 ரூபாய் வரை விற்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதனைத் தவிர்ப்பார்கள் என உற்பத்தியாளர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+