திருப்பூரில் ஐசிஐசிஐ ஏடிஎம் மிஷினில் கலர் கலராய் ரூ.500 நோட்டுகள்.. மளிகை கடையிலேயே ஓடிய ஜெராக்ஸ்
திருப்பூர்: வங்கியில் இருந்து ஏடிஎம்‑க்கு பணம் நிரப்பும்போது, தவறுதலாக போலி நோட்டுகள் கலந்து வருவதுண்டு.. ஏடிஎம்‑ல் கிடைத்த நோட்டு சந்தேகமாக இருந்தால், உடனே பொதுமக்கள், வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸ் சம்பவத்தில் ஒருவர் சிக்கி உள்ளார்.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து அச்சிடுவது சட்டப்படி குற்றமாகும்... நம்முடைய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு வகுத்துள்ள சட்டங்களின்படி, பணத்தின் வடிவம், நிறம், அளவு போன்றவற்றை ஜெராக்ஸ் எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி கிடையாது..

கலர் ஜெராக்ஸ் பண நோட்டுகள்
காரணம், ரூபாய் நோட்டின் படம் அல்லது நிறத்தை முழுமையாக காப்பி எடுப்பது, போலி நோட்டு தயாரிப்பாகவே கருதப்படும். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், இந்திய குற்றச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், அபராதம் அல்லது ஜெயில் தண்டனையும் விதிக்கப்படலாம்.. அதிலும், அந்த ஜெராக்ஸ் நோட்டு மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டால், தண்டனை இன்னும் கடுமையாகும்..
அதனால்தான் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல; அது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய கடுமையான குற்றமாகும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தபடி உள்ளனர். ஆனால், திருப்பூரில் ஒருவர் எந்த பயமும் துணிச்சலாக பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்துள்ளார்..
திருப்பூர் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
திருப்பூர் மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் உள்ள ICICI வங்கி ஏடிஎம் சென்டரில் கடந்த 15ம் தேதி செலுத்தப்பட்ட பணத்தில், 500 ரூபாய் நோட்டுகள் 12 எண்ணிக்கை போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து பேங்க் மேனேஜர் மணிமாறன், இதுகுறித்த விசாரணையை நடத்தினார்.
அந்த விசாரணையில், கவுதம் என்பவர் ஏடிஎம் மூலம் அந்த பணத்தை செலுத்தியிருந்தது தெரியவந்தது... இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ICICI Bank ATM ரூ.500
அந்த விசாரணையில், முருகம்பாளையத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் ராஜேந்திரன் (45) என்பவர் போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரது கடையில் இருந்த கலர் ஜெராக்ஸ் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரன், மளிகைக்கடை நடத்துவதுடன், வட மாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு பணம் பரிவர்த்தனை செய்து கொடுப்பது, வட்டிக்கு பணம் தருவது போன்றவற்றிலும் காசு பார்த்து வந்துள்ளார்.. ,இதுபோக தன்னுடைய தன்னுடைய மளிகை கடையில் வைத்திருந்த கலர் ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தி, 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி நோட்டுகளாக தயாரித்து புழக்கத்திலும் விட்டுள்ளார்.
மளிகை கடை ஜெராக்ஸ்
கடந்த 3 மாதங்களாக வட்டிக்கு பணம் வாங்க வந்தவர்களுக்கு, உண்மையான நோட்டுகளுடன் ஒன்றிரண்டு போலி ரூபாய் நோட்டுகளை கலந்து வழங்கி வந்ததும் தற்போது விசாரணையில் அம்பலமாகி உள்ளது..
இந்த சம்பவம் குறித்து போலீசார் சொல்லும்போது, "ராஜேந்திரன் யாருக்கெல்லாம் வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்? அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் போயிருக்கிறதா? என்ற சந்தேகம் அதிகமாக உள்ளது. அதனால் இது தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications