Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் உதயமானது 17வது புதிய பறவைகள் சரணாலயம்! முதல்வர் சொன்ன ஹாப்பி நியுஸ்! எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரி பகுதிக்கு உட்பட்ட பகுதிகள், தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கரில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம்.

கடந்த 1498-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் குளத்தில், எப்போதும் நீர் இருப்பு மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக பறவைகள் வந்து செல்ல ஏதுவாக இருந்து வருகிறது.

வெளிநாட்டு பறவைகள்

வெளிநாட்டு பறவைகள்

இதன் காரணமாக ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சேன்ட் பையர், கிரீன் ஹெரான், கிரேவாக் டெய்லர், ஸ்பூன்பில், கூழைகடா உள்ளிட்ட எண்ணற்ற பறவைகள் இங்கு வருகின்றன. உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கும் பட்டைத்தலை வாத்துக்கள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் குளிர் காலத்தில், நஞ்சராயன் குளத்திற்கு வலசை வருகின்றன. எனவே, இதனை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

சட்டப்பேரையில் அறிவிப்பு

சட்டப்பேரையில் அறிவிப்பு

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு, கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் ஏரிப்பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ,7.5 கோடி தொகையும் ஒதுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வரைவு அறிவிப்பாணை

வரைவு அறிவிப்பாணை

இந்நிலையில், சட்டப்பேவையில் அறிவிக்கப்பட்ட இதற்கான வரைவு அறிவிப்பாணையை, தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அனுப்பியுள்ளார். அதில், நஞ்சராயன் ஏரி பகுதியைச் சேர்ந்த ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 126 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை நஞ்சராயன் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கும்படி கோரியுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசன் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் ட்வீட்

முதலமைச்சர் ட்வீட்

தமிழ்நாட்டின் 17-வது பறவைகள் சரணாலயம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரியில் அமைய உள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் 17-வது சரணாலயமாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பறவைகள் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல், கோடியக்கரை, கரைவெட்டி, வேட்டங்குடி, கூந்தன்குளம் போன்ற பறவைகள் சரணாலய வரிசையில், தற்போது திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரியும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பறவைகள் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+