Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பணம் சம்பாதிக்கவும் வியூஸ்களை அதிகரிக்கவும் வதந்திகள்!" வங்கி கணக்கை முடக்கிய போலீசார்! அதிரடி

வதந்தி பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது திருப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: வட மாநில தொழிலாளர் விவகாரத்தில் வதந்தி பரப்பியோர் மீது பல்வேறு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பூர் போலீசார், நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து வேலை செய்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, அதிக ஊதியம் உள்ளிட்ட காரணங்களால் இப்படி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

ஹோட்டல் உள்ளிட்ட பல துறைகளில் இங்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதாலேயே தமிழக வணிகர்களும் அவர்களைக் கூட்டி வருகிறார்கள். அப்படி வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் இங்குப் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.

 பரவிய வதந்தி

பரவிய வதந்தி

இருப்பினும், கடந்த சில நாட்களாகவே திட்டமிட்டு சிலர் இணையத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதாவது பழைய மற்றும் எங்கேயோ நடந்த சம்பவங்களை இப்போது தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்கள் என்று கூறி வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக அவர்கள் போலி தகவல்களைப் பரப்புகின்றனர். அதிலும் சிலர் தமிழகத்தில் இந்தி பேசியதால் சிலர் கொல்லப்பட்டதாகவும் கூட வதந்திகளைப் பரப்பினர். இந்த விவகாரத்தில் சற்று பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் களத்தில் இறங்கிய போலீசார், வதந்திகளை முறியடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

 பீகார் அதிகாரிகள் குழு

பீகார் அதிகாரிகள் குழு

பீகாரில் இருந்து தமிழகத்திற்கு டாப் அதிகாரிகளைக் கொண்ட குழு வந்துள்ளது. அவர்கள் நேற்று சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று நேரடியாகத் திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருக்கும் வட மாநில தொழிலாளர்களைச் சந்திக்கிறார்கள். இதற்கிடையே அதிகப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்று வியூஸுக்காக சிலர் திட்டமிட்டு போலியான செய்திகளைப் பரப்புவதாகத் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய் தெரிவித்துள்ளார்.

 திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய்

திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சஷாங் சாய், "வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பியதற்காக பல்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ட்விட்டர், பேஸ்புக், யூடியூப்பில் பொய்யான தகவல்களைப் பரப்பியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.. அந்த போலி தகவல்களை நீக்க அந்தந்த சமூக வலைத்தள நிறுவனங்களின் சட்டப்பிரிவுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே போலி தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

 அதிக வியூஸ்கள்

அதிக வியூஸ்கள்

பேஸ்புக், யூடியூப்பில் பொய்யான தகவல்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். யூடியூபில் அதிக வியூஸ்களை பெற்று அதிகப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் போலியான வதந்தி தகவல்களைப் பரப்புகிறார்கள். எனவே, தொடர்புடைய வங்கிக் கணக்குகளை முடக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். வங்கி யார் பெயரில் இருக்கிறது என்பது குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளோம். விரைவில் அந்த வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும்.

 உதவி மையம்

உதவி மையம்

இந்த விவகாரத்தில் இதுவரை 2 ஆய்வாளர்கள் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பீகார் செல்கின்றனர். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகத் தனியாக உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் வட மாநிலத்தவர்கள் இந்த உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளோம். இதுவரை 600க்கும் மேற்பட்ட கால்கள் வந்துள்ளன. இதுவரை யாரும் தங்களுக்குப் பிரச்சினை என்று இந்த எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவில்லை.. வரும் பெரும்பாலான அழைப்புகள் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தே வருகிறது.

 விளக்கி வருகிறோம்

விளக்கி வருகிறோம்

அவர்கள் தாக்குதல் என்று வீடியோ பரவுகிறதே அது உண்மையா என்றே கேட்கிறார்கள். அது வதந்தி என்று அவர்களிடம் உரிய விளக்கம் கொடுத்து வருகிறோம். இந்தி தெரிந்த காவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் உதவி மையத்திற்கு வரும் கால்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் போலீசார் ஏற்கனவே இந்தியிலும் விளக்கம் கொடுத்துள்ளோம். சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநிலத்தவர் குறித்த தகவல்களைச் சேகரித்து ஐடிகார்டுகளை கொடுத்துள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+