அந்த ஒரு பாயிண்ட்.. திருப்பூர் ரிதன்யா வழக்கில் ரொம்ப முக்கியம்.. விஸ்மயா கேஸில் என்ன சிக்கல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கைகாட்டிப்புதூரைச் சேர்ந்த ரிதன்யா வழக்கும், கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த விஸ்மயா வழக்கும் கிட்டத்தட்ட ஒரே வழக்கு தான். அது தான் வரதட்சணை விவகாரம்.. கோடிகளை கொட்டி மகள்களை கட்டி கொடுத்த பெற்றோர்கள் மகள்களை இழந்துவிட்டார்கள். இதில் விஸ்மயா வழக்கில் கணவருக்கு கடந்த வாரம் ஜாமீன் கிடைத்தது. அதுபோல் ரிதன்யாவின் கணவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை பார்ப்போம்.
கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த 22 வயதாகும் விஸ்மயாவுக்கும் கொல்லம் உள்ள சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த எஸ் கிரண் குமார் என்பவருக்கும் 2020ம் ஆண்டு மார்ச்சில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் 100 பவுன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவ்வளவு பணம் கொடுத்தும், நகை கொடுத்தும் வரதட்சணை பிரச்சனையால் விஸ்மயா கடந்த 2021ம் ஆண்டுவாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

கேரளத்தை மட்டுமல்லாமல் மொத்த இந்தியாவை உலக்கியது இந்தச் சம்பவம். இந்த சம்பவம் நடந்து 11 மாதங்கள் முடிந்தபின்னர் கடந்த 2022ம் ஆண்டு விஸ்மயாவின் கணவர் இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்தது. அதன்படியே சிறையிலும் அடைக்கப்பட்டார் கிரண் குமார். தனது தண்டனையை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் இருக்கிறது.
ஜாமீன் கிடைத்தது
இதனிடையே இத்தனை நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்த கிரண் குமாருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. கேரள உயர் நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்றமும் அவரது தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நிவாரணம் வழங்கியிருந்தது.

கிரண் குமாருக்கு ஜாமீன் எப்படி
காரணம்... கிரண்குமார் தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வைத்த வாதம். அவர் வாதிடுகையில், கிரண் குமாரை இந்த வழக்குடன் இணைக்கும் நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று வாதிட்டார் . கிரண்குமார் தந்த தொல்லையால் விஸ்மயா வாழ்க்கையை முடித்துக் கொள்ள காரணம் என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது. மேலும் கிரண்குமார் ஊடக துன்புறுத்தலுக்கு ஆளானார் என்று வாதிட்டார். இந்த வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கிரண்குமார் செய்த மேல்முறையீட்டை அனுமதித்து, அவரை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
ரிதன்யாவின் கணவர்
விஸ்மயா வழக்கு போல் ரிதன்யா வழக்கிலும் அவரது கணவர் கவினுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுகிறது. மேலும் தண்டனை விரைவாக கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் விசாரணையின் ஆரம்ப கட்டம் என்பதால், ரிதன்யாவின் கணவர், மாமியார், மாமனாருக்கு நீதிமன்றம் ஜாமீன் தரவில்லை. ரிதன்யா வழக்கை பொறுத்தவரை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதில் ஏதேனும் விஷயங்கள், கவின்குமாருக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பொன் மாணிக்க வேல்
ஆனால் அதற்கு வாய்ப்பு மிககுறைவு. ஏனெனில் ரிதன்யா வழக்கை பொறுத்தவரை தனக்கு உடல் ரீதியான டார்ச்சர் மற்றும் மன ரீதியான டார்ச்சர் என இரண்டையும் ஆடியோவாக பேசி வைத்துள்ளார். இதுபற்றி அண்மையில் கருத்து தெரிவித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், எந்த கொம்பனாலும்,இந்த வழக்கில் வாதங்களை உடைக்க முடியாது என்றார். ரிதன்யாவின் செல்போன் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சாட்சியத்தை வைத்து விசாரித்தால், ஒரு வாரத்திலேயே தண்டனை கொடுத்து விடலாம் என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications