அலுங்காமல் குலுங்காமல் திருப்பூரில் அம்ரித் பாரத் ரெயில் சேவை! அடேங்கப்பா ரயில்ல் இத்தனை வசதிகளா
திருப்பூர்: மத்திய அரசு ரயில்வே சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாகும்... அந்தவகையில் இன்று முதல் திருப்பூர் வழியாக அம்ரித் பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.. இந்த ரயிலில் உள்ள வசதிகள் என்னென்ன? இந்த சேவையால் பயணிகளுக்கு கிடைக்கும் என்னென்ன? இவைகளை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
ஹைதராபாத்திலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு வரை அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது....

இந்த ரயில் திருவனந்தபுரம் வடக்கில் காலை 10.45 மணிக்கு கொடியசைத்து புறப்படுகிறது மற்றும் மறுநாள் மாலை 4.30 மணிக்கு சார்லப்பள்ளியை அடைகிறது. .. பயணிகள் திருப்பூரில் இன்று இரவு 8.25 மணிக்கு வந்து சில நிமிடங்களுக்கு பிறகு 8.30 மணிக்கு புறப்படும்... ரயில் எண் 06308 ஆகும்..
திருப்பூருக்கு அலுங்காமல் குலுங்காமல் ரயில் சேவை
இந்த ரெயிலில் 22 பெட்டிகள் உள்ளன, 2 பக்கமும் ரெயில் பெட்டிகளுடன் இணைந்த இன்ஜின்கள் அமைக்கப்பட்டுள்ளன... பயணிகள் குலுங்கல் இல்லாமல் பயணம் செய்ய வகைப்படுத்தப்பட்ட பெட்டி இணைப்புகள் உள்ளன.. இதனால் பயணிகளுக்கு ஈஸியான பயணமாக அமையும்..
இந்த புதிய ரயில் சேவை அம்ரித் பாரத் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.. இது பயணிகளுக்கு வேகம், பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் பயண அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் நீண்ட தொலைவு பயணங்களிலும் விரும்பிய நேரத்தில் சுலபமாக பயணம் செய்ய முடியும். இந்த முயற்சி ரயில்வே சேவையை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகும்.
அம்ரித் பாரத் ரயிலில் உள்ள வசதிகள்
இந்த அம்ரித் பாரத் ரயிலில் பயணிகள் மிகவும் வசதியாக பயணம் செய்ய முடியும், ரயில் 22 பெட்டிகள் கொண்டது மற்றும் இருபுறமும் இன்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பயணம் வேகமாகவும் நிலையானதாகவும் இருக்கும், இந்த அம்ரித் பாரத் ரயிலில் பயணிகள் மிகவும் வசதியாக பயணம் செய்யலாம்...
ரயில் 22 பெட்டிகள் கொண்டது மற்றும் இருபுறமும் இன்ஜின்கள் இணைக்கப்பட்டுள்ளதால் பயணம் மென்மையாகவும் வேகமாகவும் இருக்கும். ரயில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். பயணிகளுக்காக இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் உள்ளன,
இருளில் வெளிச்சம் - தண்ணீர் பாட்டில்கள்
நீண்ட பயணத்திலும் சுகமாக ஓய்வு எடுக்க முடியும். ரயிலில் தண்ணீர் பாட்டில்கள், மொபைல் போன் பாதுகாப்பு வசதி, மடித்து வைக்கக்கூடிய சிறிய உணவு மேசை போன்ற வசதிகள் உள்ளன. ஒளி விளக்குகள், பொதுத் தகவல் அறிவிப்பு வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன..
அதேபோல இரவு நேரத்தில் நடக்க உதவும் ரேடியம் ஒளிரும் தரை விரிப்புகள், அவசர தேவைக்கான வெளி விளக்குகள் போன்ற வசதிகளும் பயணிகளை பாதுகாப்பாகவும், சுகமாகவும் பயணம் செய்ய உதவுகின்றன. இதன் மூலம் பயணிகள் நீண்ட தொலைவு பயணங்களிலும் விரும்பிய நேரத்தில் எளிதாக பயணம் செய்ய முடியும்.
சிறப்பு ஏற்பாடு
முன்னதாக நெல்லை, விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் உள்ள பத்திரிகையாளர்கள் இந்த ரெயிலில் பயணித்து சிறப்பு அம்சங்களை நேரில் பார்வையிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்...
இதற்காகவே ரெயிலில் போதுமான இருக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது, எனவே விருப்பமுள்ள பத்திரிகையாளர்கள் தங்கள் வருகையை ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications