திருப்பூர் பள்ளி மாணவனுக்கு திடீர்னு கொட்டிய தலைமுடி.. அதுக்குனு இப்படியா? ஏற்கவே முடியாத உருவ கேலி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: குண்டாக, கருப்பாக இருப்பதை காரணம் காட்டி பலரும் கிண்டல் செய்து கொண்டேயிருந்தார்களாம். இதனால் சென்னையில் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் மற்றொரு கொடுமை நடந்துள்ளது.. மாணவன் இந்த முடிவுக்கு வர என்ன காரணம்? இது தொடர்பான விசாரணையை திருப்பூர் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். என்ன நடந்தது? யாரிந்த மாணவன்?

உருவ கேலி செய்வது அநாகரீகம் என்று தெரியாமலேயே இன்னும் பலர் உள்ளனர்.. இதற்கு காரணம், திரைப்படங்களில் காமெடி சீன்களில் உருவ கேலி என்று தெரியாமலேயே அவைகளை கைதட்டி ரசித்ததுதான்.

Tiruppur School student Hair loss

திரைப்படங்களில் உருவ கேலி

மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதித்தவர்கள் என அனைவரையும் காமெடி என்ற பெயரில் மோசமான முறையில் கேலி செய்து எத்தனையோ சினிமாக்கள் வந்திருக்கின்றன.. அந்த காலம் அங்கமுத்து, குண்டுகல்யாணம் முதல் இந்த உருவகேலி தொடர்ந்து புகுத்தப்பட்டு வருகிறது.. 80களில் கவுண்டமணி படங்களிலும்கூட உருவகேலி சர்வசாதாரணமாக இருந்தது.. ஆனால், 80கள் போலவே இப்போதுள்ள சந்தானம் காலத்திலும் உருவகேலி தொடர்வதை ஏற்க முடியாது..

திரைப்படங்களில் உருவ கேலி காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால், குடும்பங்கள், பள்ளிகள், வேலை பார்க்கும் இடங்கள் என எல்லாவற்றிலும் உருவ கேலி சர்வசாதாரணமாகிவிட்டது.. ஆனால், இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறார்கள்.. அதிலும், உருவ கேலியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மாணவர்களுக்கு இருக்கும் என்றெல்லாம் யாரும் யோசிக்கக்கூட முடியாது.

உருவ கேலி செய்த மாணவர்கள்

நேற்று முன்தினமும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.. சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா பள்ளியில் +2 பயின்று வந்துள்ளார் கிஷோர்.. 17 வயதான கிஷோரை, 3 மாணவர்கள் உருவ கேலி செய்துள்ளனர். குண்டாக, கருப்பாக இருக்கிறாய் என அந்த மாணவர்கள் கேலி செய்து கொண்டேயிருந்தார்களாம்..

இதனால் மிகுந்த கவலையடைந்த சிறுவன் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தந்துள்ளார்.. ஆனாலும், அந்த புகாரின்மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த கிஷோர், ஒரு வீட்டின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.. ஒருசில காரணங்களுக்காக உடல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளால், மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

திருப்பூர் பள்ளி மாணவன்

நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பாலுச்சாமி -சுலோச்சனா. தம்பதியின் மகன் கிருத்தீஸ்வரன்.. 14 வயதாகிறது.

அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்வு நிறைவடைந்தது. ஆனால், நேற்று கிருத்தீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவலறிந்து வந்த போலீசார் கிருத்தீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தினர்.

உருக்கமான கடிதம்

அப்போதுதான் கிருத்தீஸ்வரன் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், "எனக்கு முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறது.. நாளுக்கு நாள் அதிகமாக முடி கொட்டுவதால் என்னையே எனக்கு பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது. அதனால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருக்கிறாராம்.

இப்போது அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், முடி கொட்டியதுதான் சிறுவனின் தற்கொலைக்கு காரணமா? அல்லது வேறு காரணம் எதுவும் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+