திருப்பூரில் நடந்த பயங்கரம்.. அடுத்தடுத்து வெடித்து சிதறிய 4 சிலிண்டர்கள்.. தரைமட்டமான 42 வீடுகள்!
திருப்பூர்: திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து, வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கி இருந்த 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள், பிற மாவட்ட தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

இதனைக்கண்ட தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள 42 தகர கொட்டகைகளும் வெடித்து சிதறி தரைமட்டமாகின. அந்த தகர கொட்டைகளில் அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்து நிகழ்ந்தபோது நல்வாய்ப்பாக அந்த வீடுகளில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அங்கு எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திருப்பூரில் சிலிண்டர்கள் வெடித்து 42 தகர கொட்டகைகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications