திருப்பூரில் விழுந்த வீடியோ.. யாரந்த பிசினஸ்மேன்? திரும்ப திரும்ப அதே போட்டோ.. வெகுண்டெழுந்த அப்பா
திருப்பூர்: திருப்பூரில் தலைமறைவான 7 பேரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்.. இவருடைய 25 வயது மகன் புவனேஸ்வரன்.. திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி, வட்டிக்கு பணம் கொடுக்கும் பிசினஸ் செய்து வருகிறார்.

காதல்: இவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் அந்த மாணவியை காதலிப்பதாக சொல்லிய புவனேஸ்வரன், மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்தபோதெல்லாம் அதனை செல்போனில் வீடியோவாகவும், படமாகவும், எடுத்து வைத்துக் கொண்டார்.
அத்துடன், இந்த வீடியோக்களை தன்னுடைய நண்பர்களிடம் காட்டியிருக்கிறார்.. இதைப்பார்த்த புவனேஸ்வரனின் நண்பர்களில் ஒருவரான தமிழரசன், அந்த போட்டோக்கள், வீடியோவை தன்னுடைய செல்போனில் டவுன்லோடு செய்து வைத்து கொண்டார்.
மாணவியின் அப்பா: அதுமட்டுமல்லாமல், அந்த வீடியோக்களை அந்த மாணவியின் அப்பாவுக்கே அனுப்பி வைத்த தமிழரசன், ரூ.15 ஆயிரம் தராவிட்டால் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் அப்பா, அவினாசி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருக்கிறார். போலீசாரும் இரு தரப்பினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தது.
ஆனால், அப்போதும் அடங்காத புவனேஸ்வரன், மாணவியை விடாமல் விரட்டி, அவரை மறுபடியும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அதுபோலவே நெருக்கமான வீடியோ, போட்டோக்களை எடுத்து வைத்துள்ளார். இதனால் மாணவியின் அப்பா ஆவேசமடைந்து, புவனேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தார்.
கூலிப்படை: இதற்காகவே, தமிழரசனை நேரில் சந்தித்து, புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என்று சொல்லி உள்ளார்.. பணத்துக்காக நண்பனை கொலை செய்ய தமிழரசனும் சம்மதம் தெரிவித்தார்...
பிறகு, கொலை செய்வதற்காக தனக்கு நெருக்கமான நண்பர்கள், கூலிப்படையை தமிழரசன் ஏற்பாடு செய்து, நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரனை கொலை செய்யவும் நேரம் குறித்தார்.
நண்பர்கள்: புவனேஸ்வரனுக்கு போனை போட்ட தமிழரசன், மது அருந்தலாம் என்று சொல்லி, திருமுருகன்பூண்டி பகுதிக்கு வரவழைத்தார்.. அதன்படியே புவனேஸ்வரனும் அங்கு வந்து சேர்ந்தார்.. 2 பேரும் ஒன்றாகவே மது அருந்தினார்கள்.. புவனேஸ்வரனுக்கு போதை தலைக்கேறியதுமே, அவரை காரில் ஏற்றிக்கொண்டு ஏவிபி லே அவுட் பகுதிக்கு அழைத்து சென்றார் தமிழரசன்.
காரிலிருந்து தள்ளாடியபடியே புவனேஸ்வரன் இறங்கியதுமே, அங்கு ஏற்கனவே அரிவாள், கத்தியுடன் தயாராக நின்றிருந்த கூலிப்படையினர் புவனேஸ்வரனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்... இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த புவனேஸ்வரன் அங்கேயே சுருண்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார், விரைந்து சென்று புவனேஸ்வரனின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்தவற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை: இது தொடர்பாக விசாரணை நடத்தியபிறகுதான், மாணவியின் அப்பாவே, இப்படியொரு கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. ஆனால், மாணவியின் அப்பா, தமிழரசன், கூலிப்படை கும்பல் என 7 பேருமே தலைமறைவாகிவிட்டார்கள.. அவர்களை கைது செய்தால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணங்கள் தெரிய வரும் என்பதால், வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications