திருப்பூர் ஈஸ்வரி வாங்கிய உடனே தொலைந்த தங்கம்.. இன்ப அதிர்ச்சி தந்த இளைஞர்.. நேர்மைக்கு பரிசு
திருப்பூர்: திருப்பூர் செட்டிபாளையம் வஉசி நகர் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரி, பனியன் தொழிலாளி ஆன இவர் நேற்று திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகை கடைக்கு சென்று தான் அணிந்திருந்த தாலி செயினை மாற்றி புதிதாக சுமார் 2 லட்சம் மதிப்பில் 11 கிராம் தாலி செயினை வாங்கியுள்ளார். பின்னர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மணி பர்ஸ் சாலையில் தவிறி விழுந்தது. அதில் தங்க தாலி அப்படியே மிஸ்ஸானது. இந்லையில் செட்டிபாளையம் பெண்மணி ஈஸ்வரி தவறவிட்ட 11 கிராம் தாலி செயினை மணிகண்டன் என்பவர் ஒப்படைத்தார். அவரை காவல்துறையினர் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்கள்.
திருப்பூர் செட்டிபாளையம் வஉசி நகர் பகுதியை சார்ந்தவர் ஈஸ்வரி. பனியன் தொழிலாளி ஆன இவர் நேற்று திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நகை கடைக்கு சென்றுள்ளார். அங்கு தான் அணிந்திருந்த தாலி செயினை மாற்றி புதிதாக சுமார் 2 லட்சம் மதிப்பில் 11 கிராம் தாலி செயினை வாங்கியுள்ளார். தொடர்ந்து பேருந்து மூலம் செட்டிபாளையம் வந்துள்ளார் ஈஸ்வரி.

தவறி விழுந்த தங்கம்
அங்கு பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடையில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் கைப்பையை மூடாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த சமயம் அவரது கைப்பையில் இருந்த நகை வாங்கி வைத்திருந்த மணி பர்ஸ் சாலையில் விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த, கருவம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் கீழே கடந்த அந்த மணி பர்சை எடுத்து அருகில் இருந்தவர்களிடம் யாராவது பர்சை தவறவிட்டு சென்று விட்டார்களா என விசாரித்துள்ளார்.
மணி பர்ஸ் தொலைந்தது
தொடர்ந்து வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தம் வரை தேடிவந்த அவர், பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்த கடை உரிமையாளர்களிடம் கேட்டுள்ளார். ழுது ஒரு நபர் பரிசை எடுத்துள்ளதாகவும் அவருடைய நம்பரை கொடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஈஸ்வரி தனது மணி பர்ஸ் தான் தொலைந்து விட்டதாகவும் அதில் இன்று புதிதாக வாங்கி வந்த தாலி செயின் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உறுதி செய்த ஈஸ்வரி
இதனைத் தொடர்ந்து மணிகண்டன் திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்களை கொடுத்து நகையை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தார். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று அந்த நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார்.அதன் பின்னர் அங்கு வந்த ஈஸ்வரி தான் நேற்று வாங்கிய நகைக்கான ரசீதை காட்டி தனது நகை தான் என்பதை உறுதி செய்தார்.
நகை ஒப்படைப்பு
இதனை தொடர்ந்து ஈஸ்வரியிடம் போலீசார் நகையை ஒப்படைத்தனர். மேலும் கீழே கிடந்த 2 லட்சம் மதிப்பிலான நகையை உரியவரிடம் ஒப்படைத்ததற்காக மணிகண்டனை நல்லூர் சரக உதவி ஆணையர் தையல்நாயகி மற்றும் வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் பொன்னாடை போர்த்தி அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தனர். அண்மையில் துப்புரவு பணியாளர் சென்னையில் தவறவிட்ட தங்க நகையை திரும்ப ஒப்படைத்தார். அதன்பின்னர் அதேபோன்ற இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தன. அந்த வரிசையில் திருப்பூரிலும் சம்பவம் நடந்துள்ளது.
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
திருப்பூரில் நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த 27 வயது காமுகன்.. 75 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட நடுக்கம் -
திருப்பூர் செருப்புக்கடை ஊழியர் 28 வயதில் இப்படியொரு முடிவு.. பல்லடம் மேம்பாலத்தில் நடந்தது என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications