திருப்பூரில் நபிகள் நாயகம் குறித்து அவமதிப்பு.. காவல் நிலையம் முற்றுகை.. பனியன் குடோன் ஓனர் கைது
திருப்பூர்: திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் குடோன் நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர், சமூக வலைதளத்தில் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் நோக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வீரபாண்டி பிரிவை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரை கைது செய்தனர்.
திருப்பூர் காதர் பேட்டையில் பனியன் குடோன் நடத்தி வரும் சுந்தர்ராஜ் என்பவர், சமூக வலைதளத்தில் அண்மையில் நபிகள் நாயகம் குறித்து அவமதிக்கும் நோக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருப்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ஏற்கனவே இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த நேற்று முன்தினம் இரவு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஏராளமானோர் குவிந்தனர். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் பேச்சுவார்ததை நடத்தியதுடன், உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தநிலையில் நபிகள் நாயகம் குறித்து அவமதிப்பு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்திற்காக, திருப்பூர் காதர்பேட்டையில் பனியன் குடோன் வைத்துள்ள, வீரபாண்டி பிரிவை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 52) என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் குற்றம்: திருப்பூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 47 செல்போன்களை திருடிய வடமாநில தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் கருவம்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த 40 வயதாகும் பாலமுருகன், திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே பெட்ரோல் பங்க் பக்கத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். பாலமுருகன் செல்போன் கடையை கடந்த அக்டோபர் 3ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் இவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அங்கிருந்து ஆட்டோ டிரைவர்கள் பார்த்து பாலமுருகனுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு பாலமுருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் கடையில் இருந்த 47 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 71 ஆயிரம் என்று பாலமுருகன் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து திருப்பூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தேடினார்கள். இதில் மர்ம ஆசாமி ஒருவர் பையுடன் ஆட்டோவில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது அந்த நபர் ஆத்துப்பாளையம் பகுதியில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சென்று போலீசார் விசாரித்த போது சம்பந்தப்பட்ட நபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீத் தாகூர் (39) என்பதும், இவர் ஆத்துப்பாளையம் பகுதியில் தங்கி இருந்து பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. செல்போன் கடைக்கு முன்பு படுத்து தூங்குவது போல் நடித்து நவீன கட்டர் எந்திரத்தை வைத்து பூட்டை உடைத்து அவர் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 47 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீத் தாகூரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications